சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

'ரோபோ' இயங்குவதை சூதாடுபவர்கள் கவனிப்பதில்லை!

Added : ஜன 24, 2022 | கருத்துகள் (1)
Advertisement
'ஆன்லைன்' சூதாட்டச் செயலி எப்படி பொதுமக்களை ஈர்க்கிறது, அது எப்படி செயல்படுகிறது, அதைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று சொல்லும் 'பேங்க் ஆப் ஷார்ஜா'வின் தலைமை தகவல் பாதுகாப்பு அலுவலர் விமலாதித்தன் மணி: எளிய மனிதர்களும் விரல் நுனியில் பட்டன்களைத் தட்டி தங்கள் மொபைல்போன் மூலம் விளையாடும் இந்த ஆன்லைன் சூதாட்டங்கள், யாரும் எளிதில் அறிய முடியாத அளவுக்கு
சொல்கிறார்கள்

'ஆன்லைன்' சூதாட்டச் செயலி எப்படி பொதுமக்களை ஈர்க்கிறது, அது எப்படி செயல்படுகிறது, அதைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று சொல்லும் 'பேங்க் ஆப் ஷார்ஜா'வின் தலைமை தகவல் பாதுகாப்பு அலுவலர் விமலாதித்தன் மணி: எளிய மனிதர்களும் விரல் நுனியில் பட்டன்களைத் தட்டி தங்கள் மொபைல்போன் மூலம் விளையாடும் இந்த ஆன்லைன் சூதாட்டங்கள், யாரும் எளிதில் அறிய முடியாத அளவுக்கு தொழில்நுட்பச் சூட்சுமங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டவை.இந்தத் தொழில்நுட்பம் திரைமறைவில் என்ன தில்லாலங்கடி வேலை செய்கிறது என்றால், விளையாடும் நபரின் ஆட்ட நகர்வுகள், 'மவுஸ்' மற்றும் 'கீ போர்ட்' இயக்கங்களை சர்வர் மூலமாகவும், இதற்கென்றே வடிவமைக்கப்பட்ட பிரத்யேக செயலிகள் மூலமாகவும் கண்காணித்து, ஒரு ஆட்டத்தில் எந்த கார்டை எப்போது இறக்க வேண்டும் என்று முடிவு செய்யும் திறமை கொண்டவை. சொல்லப் போனால், ஒரு ஆட்டம் துவங்கும் முன்பே யார் வெல்வர் என்பதையும் முடிவு செய்யக்கூடிய வல்லமை படைத்தவை.இந்த தொழில்நுட்பத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், மனிதர்களுடன் சூதாட என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதிமேதாவி ரோபோக்கள் உருவாக்கப்பட்டு, அவையும் திரை மறைவில் சூதாட்டக் களத்தில் இறக்கப்படுவதை, ஆன்லைனில் சூதாடும் சாமானியர்கள் அறிவதில்லை.இந்த ஆன்லைன் சூதாட்டத்தை, சாமானியர்கள் வெறி பிடித்தாற்போல திரும்பத் திரும்ப ஆடித் தோற்று, பணத்தை இழக்கின்றனர். சீனாவில் உள்ள ஆன்லைன் சூதாட்டச் செயலிகள், காலை 6:00 முதல் இரவு 10:00 வரை தான் செயல்படும். அதற்கேற்றார் போல இணையதளச் சேவை, 24 மணி நேரமும் அரசால் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு நாளில் இவ்வளவு பணத்தை மட்டும் தான் சூதாட்டத்தில் செலவு செய்ய முடியும் என்ற உச்ச வரம்பையும் அரசு நிர்ணயித்து செயல்படுத்தி வருகிறது.சிறார்களும், இளம் வயதினரும் விளையாட அனுமதி மறுக்கப்படுகிறது. தொடர்ந்து, நான்கு மணி நேரம் ஆன்லைன் சூதாட்டம் ஆடினால், அடுத்த நான்கு மணி நேரத்துக்கு திரும்பவும் ஆட முடியாது.இதுபோன்ற கட்டுப்பாடுகளை இந்தியாவிலும் பரிசீலித்தால், ஆன்லைன் சூதாட்டத்தில் பெரும் பணத்தை இழக்கும் நிலையைக் கட்டுப்படுத்தலாம். ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களையும் தடை செய்ய வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
25-ஜன-202213:16:18 IST Report Abuse
ponssasi சூதாட்ட விளம்பரத்துக்கு பெரிய பெரிய ஜாம்பவான்தான் வருவார்கள்? திரையில் தோன்றி பலரின் குடியை கெடுத்தவர்கள் சூதாட்ட விளம்பரத்தில் தோன்றி மேலும் கெடுக்கிறார்கள், இதை விளம்பரம் செய்யும் தொலைக்காட்சியும் உடந்தை. எல்லோரும் கையை பிடித்து உட்கார வைத்தாலும் மக்களுக்கு எனக்கே போனது அறிவு. பேராசைதான் எல்லா துன்பங்களுக்கும் காரணம் என்று புத்தர் சொன்னது எக்காலத்துக்கும் பொருந்தும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X