இது உங்கள் இடம்: மனசாட்சி இருக்கிறதா?

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (45) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்வி.தினேஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: போக்குவரத்து விதியை மதித்து, உயர் நீதிமன்ற உத்தரவுகளை கடைப்பிடித்து, ஆட்டோ ஓட்டுனர் நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, படங்களுடன் செய்தி வெளியிட்டது, நம் நாளிதழ். இதை எதிர்த்து, தொ.மு.ச., -- சி.ஐ.டி.யூ., உட்பட 14உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்வி.தினேஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: போக்குவரத்து விதியை மதித்து, உயர் நீதிமன்ற உத்தரவுகளை கடைப்பிடித்து, ஆட்டோ ஓட்டுனர் நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, படங்களுடன் செய்தி வெளியிட்டது, நம் நாளிதழ்.latest tamil newsஇதை எதிர்த்து, தொ.மு.ச., -- சி.ஐ.டி.யூ., உட்பட 14 தொழிற்சங்கங்கள் இணைந்து, சென்னை, அண்ணாசாலை தாராபூர் டவர்ஸ் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளன. இந்த ஆர்ப்பாட்டம் எப்படி இருக்கிறதென்றால், 'நாங்கள் சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்வோம்... எங்களை யாரும் எந்த கேள்வியும் கேட்கக் கூடாது' என, ஆட்டோ ஓட்டுனர்கள் மிரட்டுவது போல உள்ளது.


latest tamil news
இந்த தொழிற்சங்கங்களும், மக்களுக்கு விரோதமான ஒரு காரியத்தை செய்து கொண்டிருக்கிறோம் என்ற கூச்ச உணர்வு கிஞ்சிற்றும் இன்றி, கோஷம் போட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆட்டோக்கள் ஓடுகின்றன. அங்கெல்லாம், போக்குவரத்து விதிகளை ஆட்டோ ஓட்டுனர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

அங்குள்ள ஆட்டோ ஓட்டுனர்கள், 'மீட்டர்' கட்டணத்திற்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதில்லை; பயணியிடம் மரியாதையாக பேசுகின்றனர்; சீருடை அணிகின்றனர். 'ஓலா, ஊபர்' உள்ளிட்ட 'ஆன்லைன்' ஆட்டோவில், 100 ரூபாய்க்கு செலலும் இடத்திற்கு, சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள், 200 ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கின்றனர்.

சென்னையில் உள்ள, 95 சதவீத ஆட்டோக்களில் மீட்டரே இருக்காது; அப்படி இருந்தாலும் அது வேலை செய்யாது.சட்டத்தின் படி நடந்து கொள்ளுங்கள் என்றால், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஏன் கோபம் வருகிறது.அந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக கொடி பிடித்து கோஷம் எழுப்பி போராட்டம் நடத்திய தொழிற்சங்கங்களுக்கும் மனசாட்சி என்ற ஒன்று இருக்கவே இருக்காதா?

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.kausalya - Chennai,இந்தியா
25-ஜன-202218:09:07 IST Report Abuse
S.kausalya நம் ஊர் ஆட்டோ ஓட்டுனர்கள், ஓபர் ஓலா வில் ஒப்பந்தம் செய்து கொண்டு பின், நீண்ட தூர பயணம் என்றால், பயணியர் செய்தஅழைப்பை ரத்து செய்ய சொல்லி, niruvanaththinaridam பயணியர் வரவில்லை என பொய்.சொல்லி முழு பணத்தை ஓட்டுனரே வாங்கி கொள்கிறார்கள். நிறுவனத்திற்கு தர வேண்டிய கமிஷன் பணத்தை ஏமாற்றுகிறார்கள். நிறுவனம் தான் இந்த நீண்ட தூர பயணத்திற்கு ஏற்பாடு செய்தது என்பதும் அதனால் தான் நோகாமல் பணம் பெற முடிந்தது என்பதையும் மறந்து போய் கேவலமாக நடந்து கொள்கிறார்கள் இந்த ஆட்டோ ஓட்டுனர்கள். பணம் தான் முக்கியம். வேறு எதுவும் இரண்டாம் பட்சம் என்னும்போது என்ன சொல்ல முடியும். ஞா யிறு முழு லாக் டவுன் கூடாது என வணிகர் சங்கம் கோருகிறது. மக்கள் பாதுகாப்பு பற்றி கவலை இல்லை தங்களின் வியாபாரம் அதன் மூலம் பணம் மட்டுமே கருத்தில் எடுத்து கொள்கிறார்கள்.
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
25-ஜன-202217:32:09 IST Report Abuse
A.Gomathinayagam தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆட்டோக்களில் மீட்டர் என்பது ஒரு அலங்கார பொருள் மட்டுமே ,தமிழகத்தில் உள்ள மா நகராட்சி ,நகராட்சி பகுதியில் உள்ள அணைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் இது தெரியும் ,நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை தான் பார்ப்பார்கள் . மீட்டர் கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தி ஆட்டோ ஓட்டுனர்களை மீட்டர் போட்டு ஓட்ட வைத்தால் அது கின்னஸ் சாதனை தான்
Rate this:
Cancel
r srinivasan - chennai,இந்தியா
25-ஜன-202216:46:47 IST Report Abuse
r srinivasan கசப்பான உண்மை என்னவென்றால், பெருமளவு ஆட்டோ ரிக்க்ஷாக்கள் போலீஸ் பினாமி அல்லது அரசியல்வாதிக்கு சொந்தம். என்ன புகார் கொடுத்தாலும், புகார் கொடுத்தவனுக்கு தான் தொல்லை. ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். நேரம்தான் விரையம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X