பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் நியமனம்: பிரதமர் பெருமிதம்

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (4)
Advertisement
புதுடில்லி :''உலகின் பல முன்னணி நிறுவனங்களில் சி.இ.ஒ., எனப்படும் தலைமை நிர்வாக அதிகாரிகளாக, இந்தியர்கள் நியமிக்கப்படுவது பெருமையாக உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். சான்றிதழ்புதுமையான கண்டுபிடிப்புகள், கல்வித்திறன், விளையாட்டு, கலை, கலாசாரம், பொதுச்சேவை மற்றும் வீர தீர மிக்க துறைகளில் சிறந்த சாதனைகளை படைத்த குழந்தைகளுக்கு ஆண்டுதோறும், 'பிரதம

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :''உலகின் பல முன்னணி நிறுவனங்களில் சி.இ.ஒ., எனப்படும் தலைமை நிர்வாக அதிகாரிகளாக, இந்தியர்கள் நியமிக்கப்படுவது பெருமையாக உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


சான்றிதழ்புதுமையான கண்டுபிடிப்புகள், கல்வித்திறன், விளையாட்டு, கலை, கலாசாரம், பொதுச்சேவை மற்றும் வீர தீர மிக்க துறைகளில் சிறந்த சாதனைகளை படைத்த குழந்தைகளுக்கு ஆண்டுதோறும், 'பிரதம மந்திரி பால புரஸ்கார்' எனப்படும், தேசிய குழந்தைகள் விருதைமத்திய அரசு வழங்குகிறது.latest tamil newsஇந்த விருது ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பதக்கம், சான்றிதழ் ஆகியவை அடங்கியது. விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் விருதுகளை ஜனாதிபதி வழங்குவது வழக்கம்.மேலும், டில்லியில் குடியரசு தினத்தன்று நடக்கும் பேரணியில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படுவர். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைகளுக்கான சான்றிதழ் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட உள்ளது. பரிசுத்தொகை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.


latest tamil news


இந்நிலையில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ் வழியாக பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அவர் பேசியதாவது:டில்லி இந்தியா கேட் பகுதியில் 'ஹாலோகிராம்' முறையில் முப்பரிமாண ஒளிவடிவிலான நேதாஜி சுபாஷ் சந்திர போசின் உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. நேதாஜியின் தேசபக்தியை நீங்கள் பின்பற்ற வேண்டும். 'முதலில் தேசம்' என்ற நேதாஜியின் தாரக மந்திரத்தை நீங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை வாழ்க்கையில் பழக்கிக் கொள்ள வேண்டும். உங்கள் வீடுகளில் உள்ள வெளிநாட்டு பொருட்களுக்கு பதிலாக, இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும்.

இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தே, மத்திய அரசின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நாட்டின் இளைஞர்கள் தற்போது புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் செலுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. இதனால் தேசமும் முன்னேற்றப் பாதையில் செல்கிறது.உலகின் பல முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.,வாக இந்தியர்கள் இருப்பது பெருமையாக உள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவுக்கு இளைஞர்கள் பெருமை சேர்த்து வருகின்றனர். இவ்வாறு பிரதமர் பேசினார்.

பெண் குழந்தைகள் மேம்பாடுதேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: பெண் குழந்தைகளின் மேம்பாட்டில் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பெண் குழந்தைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ள பெண் குழந்தைகளை பாராட்ட வேண்டிய நாள் இது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.விருது பெற்ற தமிழக சிறுமிதெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள அத்தாபூர் 'டில்லி ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸில்' 2ம் வகுப்பு படித்து வரும் சிறுமி விஷாலினி, 7. இவர் தமிழகத்தின் விருதுநகரைச் சேர்ந்தபேராசிரியர் நரேஷ்குமார், டாக்டர் சித்ரகலா தம்பதியின் மகள். விஷாலினி வெள்ள பேரிடர் காலங்களில் உயிர், உடைமை காக்கும் வகையில் தானியங்கி மிதக்கும் வீட்டை கண்டுபிடித்துள்ளார்.

இதில், சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர், உணவு பொருட்கள் அடங்கிய பைகள், முதலுதவி பெட்டி, ஜி.பி.எஸ்., வசதி போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன. இக்கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசால் இவருக்கு இளைய காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சிறுமி விஷாலினிக்கு பால புரஸ்கார் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய் பரிசு தொகையை வழங்கி பாராட்டினார்.


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-ஜன-202206:46:24 IST Report Abuse
Kasimani Baskaran இதில் 99% இடஒதுக்கீட்டில் சிறமப்பட்டு இந்தியாவில் முன்னேற வாய்ப்பில்லை என்று ஓடிப்போனவர்கள்தான். இவர்களின் திறமைகளை இந்தியாவால் உபயோகப்படுத்தமுடியாமல்போனது துரதிஷ்டவசமானது.
Rate this:
selva - Chennai,இந்தியா
27-ஜன-202212:24:32 IST Report Abuse
selva10% நாக்கு ......
Rate this:
Cancel
baskeran - london,யுனைடெட் கிங்டம்
25-ஜன-202204:35:04 IST Report Abuse
baskeran Hi hi hi...... But no one likes?????
Rate this:
Cancel
natesa -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜன-202204:31:35 IST Report Abuse
natesa but, BJP government wants to stop childrens education through new educational policy.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X