வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிம்லா : ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. ஹிமாச்சலில் பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் மின் வினியோகம் தடைபட்டுள்ளன. மலையேற்றம் சென்ற இரண்டு இளைஞர்கள் சடலமாக
மீட்கப்பட்டுள்ளனர்.
டில்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தர கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திலும் கடும் பனிப்
பொழிவு நிலவுகிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் நான்கு தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 731 சாலைகள் மூடப்பட்டுள்ளன. மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இங்குள்ள கங்க்ரா என்ற இடத்தில் மலையேற்றத்துக்கு சென்ற இளைஞர்களில் இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தலைநகர் டில்லியில் நேற்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. அடுத்த சில நாட்களுக்கு டில்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE