லக்னோ : உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளதை அடுத்து, வீடு வீடாகச் சென்று பா.ஜ., தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.மத்திய - மாநில அரசுகளின் திட்டங்களில் பலனடைந்தவர்கள் வசிக்கும் நான்கு கோடிக்கும் அதிகமானோரின் வீடுகளில் தாமரைச் சின்னம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டி வருகின்றனர் உ.பி.,யில் சட்டசபை தேர்தல் ஏழு கட்டமாக நடத்தப்படுகிறது.
அனுமதி
கொரோனா பரவல் காரணமாக பேரணி, பொதுக் கூட்டங்கள் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. எனினும் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரிக்க 10 பேர் வரை செல்ல அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யும் பணியை பா.ஜ., துவக்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பிரசாரத்தை துவக்கி வைத்தனர்.
மாநில நிர்வாகிகள் அனைவரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:மாநிலத்தில் 403 தொகுதிகளிலும் வீடு வீடாக பிரசாரத்தில் ஈடுபட்டுஉள்ளோம். மத்திய - மாநில அரசுகளின் திட்டங்களால் பயன் அடைந்தோர் வசிக்கும் வீடுகளின் கதவுகளில் தாமரை சின்னம் அச்சிடப் பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டி வருகிறோம்.
இதேபோல் நான்கு கோடிக்கும் அதிகமான வீடுகளில் ஒட்ட திட்டமிட்டுள்ளோம்.ஒவ்வொரு வீட்டிலும், குறைந்தது இரண்டு அல்லது மூன்று வாக்காளர்கள் உள்ளனர். அவர்களின் ஓட்டுக்களை பெறும் நோக்கில், இந்த பிரசாரத்தை துவக்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே உ.பி., தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும் 159 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதில் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், கர்ஹால் தொகுதியில் போட்டியிடுகிறார்.
பாக்., விருப்பம்
பஞ்சாபில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ள பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமரீந்தர் சிங் கூறியதாவது:
நான் பஞ்சாப் முதல்வராக இருந்த போது என் அமைச்சரவையில் நவ்ஜோத் சிங் சித்து மீண்டும் இடம் பெற வேண்டும் என பாகிஸ்தான் விரும்பியது. அமைச்சரவையிலிருந்து நவ்ஜோத் சிங் சித்துவை நான் நீக்கியவுடன், பாகிஸ்தானில் இருந்து எனக்கு ஒரு தகவல் வந்தது.அதில், 'பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய நண்பர் சித்து. அமைச்சரவையில் சித்து நீடித்தால் உங்களுக்கு இம்ரான் கான் நன்றிக்கடன் பட்டவராக இருப்பார்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.சித்துவுக்கு மூளையே கிடையாது. அவரை கட்சியில் சேர்க்க வேண்டாம் என சோனியாவிடம் ஐந்து ஆண்டுக்கு முன்பே தெரிவித்தேன்.ஆனால் அவர் கேட்கவில்லை.
சித்துவால் பஞ்சாபில் காங்கிரஸ் அழிந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.பஞ்சாபில் தொகுதி பங்கீடுமுதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபில், அடுத்த மாதம் 20ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த, முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்னும் கட்சியை துவக்கினார். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இந்த கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் பா.ஜ., 65; பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37; அகாலி தளம் சன்யுக்த் பிரிவு 15 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக பா.ஜ., தேசிய தலைவர் நட்டா நேற்று அறிவித்தார்.
'சித்து அமைச்சராக பாக்., விருப்பம்'
பஞ்சாபில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ள பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமரீந்தர் சிங் கூறியதாவது:நான் பஞ்சாப் முதல்வராக இருந்த போது என் அமைச்சரவையில் நவ்ஜோத் சிங் சித்து மீண்டும் இடம் பெற வேணடும் என பாகிஸ்தான் விரும்பியது.
அமைச்சரவையிலிருந்து நவ்ஜோத் சிங் சித்துவை நான் நீக்கியவுடன், பாகிஸ்தானில் இருந்து எனக்கு ஒரு தகவல் வந்தது.அதில், 'பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய நண்பர் சித்து. அமைச்சரவையில் சித்து நீடித்தால் உங்களுக்கு இம்ரான் கான் நன்றிக்கடன் பட்டவராக இருப்பார்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. சித்துவுக்கு மூளையே கிடையாது. அவரை கட்சியில் சேர்க்க வேண்டாம் என சோனியாவிடம் ஐந்து ஆண்டுக்கு முன்பே தெரிவித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. சித்துவால் பஞ்சாபில் காங்கிரஸ் அழிந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE