மீண்டும் வெற்றிக்கொடி பறக்கும்: பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

Added : ஜன 25, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில், மாநகராட்சி வார்டுகளில் போட்டியிட, 232 பேர், விருப்பமனு கொடுத்திருந்தனர். விரைவில், தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், நேற்று, விருப்பமனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல் நடந்தது.திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், நேர்காணல் நடத்தினார்.அமைப்பு செயலாளர் சிவசாமி,
 மீண்டும் வெற்றிக்கொடி பறக்கும்: பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

திருப்பூர்:திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில், மாநகராட்சி வார்டுகளில் போட்டியிட, 232 பேர், விருப்பமனு கொடுத்திருந்தனர். விரைவில், தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், நேற்று, விருப்பமனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல் நடந்தது.திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், நேர்காணல் நடத்தினார்.அமைப்பு செயலாளர் சிவசாமி, இளைஞரணி மாவட்ட செயலாளர் குணசேகரன், எம்.எல்.ஏ., விஜயகுமார் உள்ளிட்டோர் நேர்காணல் நிகழ்வில் பங்கேற்றனர்.நேற்று, வடக்கு தொகுதி வார்டுகளில் விருப்ப மனு கொடுத்த, 117 பேர்; தெற்கு தொகுதியின், 21 வார்டுகளில், 115 பேர் என, 232 பேர் நேர்காணலில் பங்கேற்றனர்.நேர்காணல் அறிமுக கூட்டத்தில், பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ''அ.தி.மு.க.,வில் மட் டுமே, தொண்டர்களும் முதல்வராக வரும் அளவுக்கு ஜனநாயகம் இருக்கிறது. கட்சிக்காக பாடுபட்டு வருவோருக்கே, மரியாதையும், பதவியும் கிடைக்கும். பலர் விருப்பமனு கொடுத்திருந்தாலும், ஒருவர் மட்டுமே வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.வேட்பாளர் வெற்றிக் காக, அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும். திருப்பூர் மாநகராட்சியில், மீண்டும் அ.தி.மு.க., வின் வெற்றிக் கொடி பறக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X