ஆறுமுகசாமி விசாரணை கமிஷன்; பதவிக் காலம் 5 மாதம் நீட்டிப்பு

Updated : ஜன 25, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (17)
Advertisement
சென்னை :ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் பதவிக் காலம், மேலும் ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், 2017 செப்., 25ல் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து, அறிக்கை அளிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.விசாரணை கமிஷன் சார்பில்,
ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் பதவிக் காலம் 5 மாதம் நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை :ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் பதவிக் காலம், மேலும் ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், 2017 செப்., 25ல் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து, அறிக்கை அளிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.விசாரணை கமிஷன் சார்பில், மருத்துவர்கள், செவிலியர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஜெயலலிதா உறவினர்கள் என, 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், மருத்துவக் குழு அமைத்து விசாரணை நடத்தக்கோரி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், நீதிமன்றம் சென்றது; விசாரணை தடைபட்டது.தற்போது உச்ச நீதிமன்றம் எய்ம்ஸ் மருத்துவக்குழு அமைத்து, விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது.

விசாரணை கமிஷன் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஏற்கனவே, ஐந்து மாதங்கள் கால நீட்டிப்பு கோரி, ஆணையம் சார்பில் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. கோரிக்கையை ஏற்ற அரசு, கமிஷனின் பதவிக் காலத்தை, மேலும் ஐந்து மாதங்கள், அதாவது ஜூன் 24 வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜன-202217:27:11 IST Report Abuse
theruvasagan இதுவரைக்கும் கண்டுபுடிச்சது என்ன. இதுக்கு மேல எதையெல்லாம் கண்டுபிடிக்க போறாரு. இத்தனை நாள்ள இந்த ஜன்மம் மட்டுமல்ல. முன்னேழு ஜன்ம சமாசாரங்களையே கண்டுபிடிச்சிருக்கலாம். மக்களோட வரிப்பணம் எந்தெந்த வழிகளில் எல்லாம் வீணடிக்கப்படுகிறது பாருங்க.
Rate this:
Cancel
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜன-202210:54:50 IST Report Abuse
Yaro Oruvan பலே பலே பலே.. அப்டியே இன்னும் அஞ்சு வருஷத்துக்கு நீட்டிச்சு தண்ட சம்பளம் கொடுங்க.. தன்டங்க ஆட்சில தண்டமா செலவழிச்சா தன்டங்க நன்னா அனுப்பவிக்கும்
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
25-ஜன-202210:49:03 IST Report Abuse
R. Vidya Sagar மக்கள் வரிப்பணம் வீண். இவர் நேர்மையான நீதிபதியாக இருந்தால் சம்பளத்தை வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X