அவதூறு வழக்கில் மாஜி முதல்வர் அச்சுதானந்தனுக்கு ரூ. 10 லட்சம் அபராதம்

Updated : ஜன 25, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (2)
Advertisement
திருவனந்தபுரம்: அவதூறு வழக்கில் கேரளா முன்னாள் அச்சுதானந்தனுக்கு ரூ. 10 லட்சம் அபாரதம் விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். கேரளாவில், 'சோலார் பேனல்' எனப்படும், சூரிய ஒளி மின் தகடு அமைப்பதற்கான உரிமம் பெற்றுத் தருவதாக கூறி, பண மோசடி செய்ததாக, சரிதா நாயர் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. கைது செய்யப்பட்ட சரிதா நாயர், அப்போதைய கேரள முதல்வரும், காங்., மூத்த தலைவருமான,
Ex-Kerala CM Achuthanandan asked அவதூறு வழக்கு,மாஜி முதல்வர் அச்சுதானந்தன், ரூ. 10 லட்சம் அபராதம் to pay Rs 10 lakh defamation charges to Oommen Chandy

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருவனந்தபுரம்: அவதூறு வழக்கில் கேரளா முன்னாள் அச்சுதானந்தனுக்கு ரூ. 10 லட்சம் அபாரதம் விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

கேரளாவில், 'சோலார் பேனல்' எனப்படும், சூரிய ஒளி மின் தகடு அமைப்பதற்கான உரிமம் பெற்றுத் தருவதாக கூறி, பண மோசடி செய்ததாக, சரிதா நாயர் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. கைது செய்யப்பட்ட சரிதா நாயர், அப்போதைய கேரள முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, உம்மன் சாண்டி உட்பட பல அமைச்சர்கள் மீதும், பாலியல் புகார் கூறினார்.


latest tamil news



இந்த வழக்கு தொடர்பாக கம்யூ. மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன், 2013-ம் ஆண்டு மலையாள செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், உம்மன் சாண்டி குறித்து அவதூறாக பேட்டியளித்ததார்.

இதையடுத்து அச்சுதானந்தன் மீது, திருவனந்தபுரம் முதன்மை நீதிமன்றத்தில் உம்மன் சாண்டி தொடர்ந்த அவதூறு வழக்கு நேற்று நீதிபதி சிபு டேனியல் முன் நடந்த விசாரணைக்கு வந்தது. உம்மன் சாண்டி மீது அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பை வரவேற்பதாகவும், நீதி வென்றது எனவும் தெரிவித்தார் உம்மன் சாண்டி.



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-ஜன-202206:41:23 IST Report Abuse
Kasimani Baskaran மோசடி வழக்குக்கு தீர்ப்பு கிடையாது - ஆனால் அவதூறு வழக்கு மட்டும் மிக மிக வேகமாக விசாரிக்கிறார்கள்...
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
25-ஜன-202202:23:39 IST Report Abuse
Ramesh Sargam ரூ. 10 லட்சம் அபாரதம் ? அவ்வளவுதானா...? அது அவர் பேரப்பிள்ளைகளின் தினசரி பாக்கெட் செலவு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X