வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: அவதூறு வழக்கில் கேரளா முன்னாள் அச்சுதானந்தனுக்கு ரூ. 10 லட்சம் அபாரதம் விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்.
கேரளாவில், 'சோலார் பேனல்' எனப்படும், சூரிய ஒளி மின் தகடு அமைப்பதற்கான உரிமம் பெற்றுத் தருவதாக கூறி, பண மோசடி செய்ததாக, சரிதா நாயர் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. கைது செய்யப்பட்ட சரிதா நாயர், அப்போதைய கேரள முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, உம்மன் சாண்டி உட்பட பல அமைச்சர்கள் மீதும், பாலியல் புகார் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பாக கம்யூ. மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன், 2013-ம் ஆண்டு மலையாள செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், உம்மன் சாண்டி குறித்து அவதூறாக பேட்டியளித்ததார்.
இதையடுத்து அச்சுதானந்தன் மீது, திருவனந்தபுரம் முதன்மை நீதிமன்றத்தில் உம்மன் சாண்டி தொடர்ந்த அவதூறு வழக்கு நேற்று நீதிபதி சிபு டேனியல் முன் நடந்த விசாரணைக்கு வந்தது. உம்மன் சாண்டி மீது அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பை வரவேற்பதாகவும், நீதி வென்றது எனவும் தெரிவித்தார் உம்மன் சாண்டி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE