புதுடில்லி : காற்று மாசை குறைக்கும் வகையிலும், மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், ரயில்வே ஸ்டேஷன்களில் 'சார்ஜிங்' வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ரயில்வே அமைச்சகத்துடன், நிடி ஆயோக் பேச்சு நடத்தி வருகின்றது.

காற்று மாசை குறைக்கும் வகையில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்த மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகின்றது. 'பேம் - 2' திட்டத்தின் கீழ் நாடு முழுதும் 7,000 பஸ்கள், ஐந்து லட்சம் ஆட்டோக்கள் 55 ஆயிரம் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 10 லட்சம் இரண்டு சக்கர வாகனங்களை இயக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்காக மானியமும் வழங்கப்படுகிறது.மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், அவற்றுக்கு தேவையான 'சார்ஜிங்' வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக பொது போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ரயில்வேயை பயன்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது.

ரயில்வே ஸ்டேஷன்களில் சார்ஜிங் வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக ரயில்வே அமைச்சக உயரதிகாரிகளுடன், மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிடி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் பேசி வருகிறார். இது தொடர்பான கொள்கையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE