வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : நம் நாட்டில் கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. ஆனாலும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அடைய வைத்துள்ளது.
கொரோனா மூன்றாவது அலை நாடு முழுதும் உச்சத்தை எட்டிய நிலையில், பல மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன; தடுப்பூசி பணிகளும் விரைவு படுத்தப்பட்டன. இதையடுத்து கடந்த சில நாட்களாக கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
எனினும், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.கடந்த 17 முதல் 23ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் 2,680 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அதற்கு முந்தைய வாரத்தில் 1,396 உயிரிழப்புகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.அதேநேரத்தில், கடந்த 20ம் தேதி 3.47 லட்சம் பேரும், 21ம் தேதி 3.37 லட்சம் பேரும், 22ம் தேதி 3.33 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் 3.06 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இதன் வாயிலாக தினசரி பாதிப்பு கணிசமாக குறைந்து வருவது உறுதியாகி உள்ளது. இதற்கிடையே, டில்லி எய்ம்ஸ் தொற்றுநோயியல் நிபுணரான டாக்டர் சஞ்சய் ராய் நேற்று கூறியதாவது:கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்கள் தான், மிகவும் பாதுகாப்பான நபர்களாக கருதப்படுகின்றனர்.
அதைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திய நபர்கள், பாதுகாப்பானவர்களாக உள்ளனர்.விரைவில் பெரும்பாலான மக்கள், கொரோனாவால் பாதிக்கப்பட உள்ளனர். அதைத்தொடர்ந்து, 'எண்டமிக்' எனப்படும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் தாக்கும் நிலையை எட்டிவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.
21 பேருக்கு பாதிப்பு
நம் நாட்டில் ஒமைக்ரான் வைரசின் மற்றொரு பிரிவான பி.ஏ., 2 வகை வைரசால் 21 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மத்திய பிரதேசத்தின் இந்துாரில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் கடந்த 18 நாட்களில் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில், 22 பேரின் மாதிரிகளில் இந்த புதிய வகை வைரஸ் இருப்பது தெரியவந்துஉள்ளது.
தவறான சிகிச்சை முறை மூத்த மருத்துவ ஆராய்ச்சியாளரான டாக்டர் ககன்தீப் காங் நேற்று கூறியதாவது:ஒமைக்ரான் வகை கொரோனா வைரசில் இருந்து குணமடைய, 'மோனோகுளோனல் ஆன்டிபாடி தெரபி' எனப்படும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சை முறையை, டாக்டர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.
அது நெறிமுறையற்ற, அறிவியல்பூர்வமற்ற சிகிச்சை முறை. டாக்டர்கள், வேறு சிறந்த சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தடுப்பூசி செலுத்தாதோருக்கு ஆபத்துஉலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப குழு தலைவர் மரியா வான் கெர்கோவ் நேற்று கூறியதாவது:ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோருக்கு அனைத்து விதமான பாதிப்புகளும் ஏற்படுகின்றன. அறிகுறிகள் இல்லாமல் பலர் பாதிக்கப்படுகின்றனர்; பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.வயது அதிகமானோர், வேறு நோய்களால் பாதிக்கப்பட்டோர், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் ஆகியோருக்கு, ஒமைக்ரான் வைரசால் மோசமான பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனாவுக்கு முடிவுஐரோப்பிய நாடுகளில், 'ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில்,உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய நாடுகளுக்கான இயக்குனர் ஹான்ஸ் குளூஜ் நேற்று கூறுகையில், “ஐரோப்பாவில் கொரோனா பரவலை, ஒமைக்ரான் வகை வைரஸ் ஒரு புதிய பரிமாணத்திற்கு நகர்த்திவிட்டது.
விரைவில், அங்கு கொரோனாவுக்கு முடிவு வர உள்ளது,” என்றார்.சரத் பவாருக்கு தொற்றுதேசியவாத காங்., கட்சித் தலைவர் சரத் பவார், 81, நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து டாக்டர்களின் பரிந்துரையை ஏற்று, அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதை அறிக்கை வெளியிட்டு உறுதிபடுத்திய சரத் பவார், தன்னை சமீபத்தில் சந்தித்த அனைவரையும், கொரோனா பரிசோதனைகளை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE