வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் இருந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிச்சாமி, பன்னீர் செல்வம் படங்களை தி.மு.க., வினர் அகற்ற கூறியதால் அவை அப்புறப்படுத்தப்பட்டன.
காரைக்குடி ஆவின் நிறுவனத்தில், ஆய்வுக் கூட்டம், நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டனர். ஆவின் தலைவராக அ.தி.மு.க., வைச் சேர்ந்த அசோகன் உள்ளார். அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

நிகழ்ச்சி நடந்த போது ஆவின் சேர்மன் அறைக்குள் தி.மு.க.,வினர் சென்றனர். அங்கு முன்னாள் முதல்வர்கள் படங்கள் இருந்தன. முதல்வர் ஸ்டாலின் படம் இல்லை. அ.தி.மு.க., வினர் படங்களை பார்த்த தி.மு.க.,வினர் அங்கிருந்த அலுவலர்களிடம் யார் ஆட்சியில் யார் படத்தை வைப்பது, உடனடியாக படத்தை அகற்றுங்கள் எனக்கூறினர். ஆவின் பணியாளர்கள் மூன்று படங்களையும் உடனடியாக அகற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE