வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கவுள்ள காங்., நட்சத்திர அரசியல் தலைவர்கள்..!

Updated : ஜன 25, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (10)
Advertisement
லக்னோ: ஏழு மாநிலத் தேர்தலை முன்னிட்டு வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கவுள்ளனர் காங்., நட்சத்திர அரசியல் தலைவர்கள்.ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாதல், காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா, குலாம் நபி ஆசாத், ஆர்பிஎம் சிங், முன்னாள் ஜேஎன்யு பல்கலை., மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


லக்னோ: ஏழு மாநிலத் தேர்தலை முன்னிட்டு வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கவுள்ளனர் காங்., நட்சத்திர அரசியல் தலைவர்கள்.latest tamil newsராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாதல், காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா, குலாம் நபி ஆசாத், ஆர்பிஎம் சிங், முன்னாள் ஜேஎன்யு பல்கலை., மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார், ஜி-23 மாநாட்டு தலைவர்களில் ஒருவரான பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்ட 30 காங்., நட்சத்திர அரசியல் தலைவர்கள் தற்போது உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநில தேர்தல்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


latest tamil newsவீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க இம்முறை காங்கிரஸ் முக்கிய தலைவர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. மேலும் ஒமைக்ரான் கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடித்து சிறிய கூட்டங்களிலும் இவர்கள் கலந்துகொள்ள வியூகம் வகுத்துள்ளது.

இதிலிருந்து ஏழு மாநிலங்களிலும் பெரும்பான்மை பெற்று வெற்றியடைய காங்கிரஸ் அதி தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது தெளிவாகிறது. வரும் பிப்ரவரி 10ஆம் தேதி துவங்கி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்ற காங்கிரஸ் இந்தப் பிரச்சார உத்தியை பயன்படுத்துகிறது.

கடந்தமுறை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ., அரசு 312 இடங்களை கைப்பற்றிய நிலையில் சமாஜ்வாடி கட்சி 47 தொகுதிகளையும் பகுஜன் சமாஜ் 19 இடங்களை கைப்பற்றின.
அப்போது காங்கிரஸ் வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வென்று படுதோல்வியைத் தழுவியது. தற்போது இதே போட்டி நிலவினாலும் கடந்த ஐந்தாண்டு யோகி அரசு ஆட்சியில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், இதனால் காங்கிரஸ் இம்முறை கண்டிப்பாக வெல்லும் என்றும் அக்கட்சித் தலைமை நம்புவது குறிப்பிடத்தக்கது.


Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
25-ஜன-202211:20:43 IST Report Abuse
Ramesh Sargam வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரியுங்கள். கூடவே தரையில் உட்கார்ந்து சாப்பிட்டு, போட்டோ எடுத்து 'நாங்களும் சாமானியர்கள்தான்' என்று விளம்பரம் செய்துகொள்ளுங்கள். இது போன்று நாடகங்களை நாங்கள் வொவொரு தேர்தல் சமயத்திலும் பார்க்கிறோம். புதுசா ஏதாவது செய்யுங்கப்பா... போரடிக்குது.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
25-ஜன-202210:37:53 IST Report Abuse
sankaseshan எவ்வளவு குட்டி கரணம் போட்டாலும் வாக்கு பிச்சை கிடைக்காது இவனு ங்க மூஞ்சியை பாத்தாலே கதவை மூடிடுவாங்க மக்கள்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-ஜன-202210:31:28 IST Report Abuse
duruvasar கரூர் கார்மேகம் செல்லாத பிராச்சாரம் எடுபடாது. தேர்தல் முடிவுக்கு பின் யார் பொறுப்பு என்ற பெயரை முடிவு செய்துவிட்டார்களா? காங்கிரஸ் கட்சியின் தேர்தல் யுக்திகளில் இது மிகவும் முக்கியமானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X