வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: ஏழு மாநிலத் தேர்தலை முன்னிட்டு வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கவுள்ளனர் காங்., நட்சத்திர அரசியல் தலைவர்கள்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாதல், காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா, குலாம் நபி ஆசாத், ஆர்பிஎம் சிங், முன்னாள் ஜேஎன்யு பல்கலை., மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார், ஜி-23 மாநாட்டு தலைவர்களில் ஒருவரான பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்ட 30 காங்., நட்சத்திர அரசியல் தலைவர்கள் தற்போது உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநில தேர்தல்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க இம்முறை காங்கிரஸ் முக்கிய தலைவர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. மேலும் ஒமைக்ரான் கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடித்து சிறிய கூட்டங்களிலும் இவர்கள் கலந்துகொள்ள வியூகம் வகுத்துள்ளது.
இதிலிருந்து ஏழு மாநிலங்களிலும் பெரும்பான்மை பெற்று வெற்றியடைய காங்கிரஸ் அதி தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது தெளிவாகிறது. வரும் பிப்ரவரி 10ஆம் தேதி துவங்கி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்ற காங்கிரஸ் இந்தப் பிரச்சார உத்தியை பயன்படுத்துகிறது.
கடந்தமுறை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ., அரசு 312 இடங்களை கைப்பற்றிய நிலையில் சமாஜ்வாடி கட்சி 47 தொகுதிகளையும் பகுஜன் சமாஜ் 19 இடங்களை கைப்பற்றின.
அப்போது காங்கிரஸ் வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வென்று படுதோல்வியைத் தழுவியது. தற்போது இதே போட்டி நிலவினாலும் கடந்த ஐந்தாண்டு யோகி அரசு ஆட்சியில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், இதனால் காங்கிரஸ் இம்முறை கண்டிப்பாக வெல்லும் என்றும் அக்கட்சித் தலைமை நம்புவது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE