போலி நகைக்கு ரூ.1.64 கோடி கடன்

Added : ஜன 25, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்-உத்திரமேரூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் போலி நகைளை பெற்று, 1.64 கோடி ரூபாய் நகை கடன் வழங்கி மோசடி செய்த வங்கி ஊழியர்கள் இருவரை, காஞ்சிபுரம் வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலர் கலைசெல்வி, 58. நகை மதிப்பீட்டாளர் விஜயகுமார், 47. மேற்பார்வையாளர் ஜெயஸ்ரீ, 51.இவர்கள், வங்கி

காஞ்சிபுரம்-உத்திரமேரூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் போலி நகைளை பெற்று, 1.64 கோடி ரூபாய் நகை கடன் வழங்கி மோசடி செய்த வங்கி ஊழியர்கள் இருவரை, காஞ்சிபுரம் வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலர் கலைசெல்வி, 58. நகை மதிப்பீட்டாளர் விஜயகுமார், 47. மேற்பார்வையாளர் ஜெயஸ்ரீ, 51.இவர்கள், வங்கி உறுப்பினர்கள் 24 பேருக்கு, 1.64 கோடி ரூபாய் நகை கடன் கொடுத்துள்ளனர். ஆண்டு தணிக்கையின் போது, இந்த நகைகள் அனைத்தும் போலி என்பதும், 2019, அக்., 18 முதல் 2021 மார்ச் 29 வரை இந்த மோசடி நடந்துள்ளதும் தெரியவந்தது.இதுகுறித்து, நகைகளை ஆய்வு செய்த உதவி கூட்டுறவு பதிவாளர் அமுதா, மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் சுவாதிக்கு தெரிவித்தார்.அவர் விசாரணை செய்ததில், போலி நகை பெற்று கோடிக்கணக்கில் கடன் தொகை வழங்கியது உறுதியானது. அவரது புகாரையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட வணிக குற்ற புலனாய்வு போலீசார் விசாரித்தனர். தலைமறைவாக இருந்த மேற்கண்ட மூவரை, துணை காவல் கண்காணிப்பாளர் முரளி, ஆய்வாளர் தேன்மொழி மற்றும் போலீசார் தேடினர். இந்நிலையில், கலைசெல்வி, விஜயகுமார் ஆகியோரை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஜெயஸ்ரீயை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X