கோவளம் - நீலாங்கரை இடையே கடலில் நீந்தி 8 வயது சிறுமி சாதனை

Added : ஜன 25, 2022 | கருத்துகள் (6)
Advertisement
கோவளம் முதல் நீலாங்கரை வரை, கடலில் 6 மணி 14 நிமிடத்தில், 19 கி.மீ., கடல் துாரம் நீச்சல் அடித்து 8 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.சென்னை, நீலாங்கரையை சேர்ந்தவர் ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த், 40. இவர், கடல் வளம் பாதுகாக்க, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.ஆழ்கடலில் திருமணம் நடத்தியது, சைக்கிள் ஓட்டியது, உடற்பயிற்சி, யோகா, கிரிக்கெட் விளையாட்டு, தேசிய கொடி
 கோவளம் - நீலாங்கரை இடையே கடலில் நீந்தி 8 வயது சிறுமி சாதனை

கோவளம் முதல் நீலாங்கரை வரை, கடலில் 6 மணி 14 நிமிடத்தில், 19 கி.மீ., கடல் துாரம் நீச்சல் அடித்து 8 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.

சென்னை, நீலாங்கரையை சேர்ந்தவர் ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த், 40. இவர், கடல் வளம் பாதுகாக்க, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.ஆழ்கடலில் திருமணம் நடத்தியது, சைக்கிள் ஓட்டியது, உடற்பயிற்சி, யோகா, கிரிக்கெட் விளையாட்டு, தேசிய கொடி பறக்கவிட்டது என, கடலுக்குள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திஉள்ளார்.

கடந்த 16 ஆண்டுகளாக கடல் நீச்சல் பயிற்சியும் அளித்து வருகிறார். இவரது மகள் தாரகை ஆராதனா, 8. இவர், பிறந்த ஒன்பது மாதத்திலே, கடலில் மிதக்கும் அளவுக்கு, தந்தை அரவிந்த் பயிற்சி அளித்தார். தந்தையிடம் தொடர்ந்து நீச்சல் பயிற்சி பெற்ற தாரகை ஆராதனா, நேற்று, கோவளத்தில் இருந்து நீலாங்கரை வரை, 19 கி.மீ., துாரத்தை, 6 மணி நேரம், 14 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்தார். கடலோர பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற்று, இந்நிகழ்ச்சி நடந்தியதாக அரவிந்த் தெரிவித்துள்ளார்
- -நமது நிருபர்- -.


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
25-ஜன-202211:42:29 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இவருடைய சாதனைகளுக்கு வாழ்த்துக்கள். குற்றாலீஸ்வரன் ஞாபகம் வருகிறது.
Rate this:
Cancel
Jaihind - Chennai,இந்தியா
25-ஜன-202210:30:36 IST Report Abuse
Jaihind குழந்தை ஆராதனாவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் அவருடைய பெற்றோர்களுக்கு வணக்கங்கள்
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
25-ஜன-202209:36:26 IST Report Abuse
Ramesh Sargam வாழ்த்துக்கள் குழந்தை ஆராதனாவுக்கு, அவர் தகப்பனாருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X