தரமான பிரசாதம் வினியோகம்: 314 கோவில்களுக்கு தரச்சான்றிதழ்

Updated : ஜன 25, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (16)
Advertisement
சென்னை : பக்தர்களுக்கு தரமான பிரசாதம், அன்னதானம் வழங்கும் வகையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவன தரச்சான்றிதழ்கள் பெற்ற கோவில் செயல் அலுவலர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து, சான்றிதழ்களை வழங்கினார்.ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி
பிரசாதம், கோவில், தரச்சான்றிதழ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : பக்தர்களுக்கு தரமான பிரசாதம், அன்னதானம் வழங்கும் வகையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவன தரச்சான்றிதழ்கள் பெற்ற கோவில் செயல் அலுவலர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து, சான்றிதழ்களை வழங்கினார்.

ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில்.திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில்; சமயபுரம் மாரியம்மன் கோவில்; திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகியவற்றில், நாள் முழுதும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்துடன், 754 கோவில்களில் ஆண்டுக்கு 76 கோடி ரூபாய் செலவில், தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம், மத வழிபாட்டு தலங்களில், இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாத வகைகளை பரிசோதித்து, தரச் சான்றிதழ்களை வழங்கி வருகிறது. கடந்த ஆட்சியில் ஆறு கோவில்களுக்கு தரச் சான்றிதழ்கள் பெறப்பட்டன. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் 308 கோவில்களுக்கு தரச் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன.


latest tamil news


மேலும், 440 கோவில்களுக்கு சான்றிதழ்கள் பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுதும் 394 மத வழிபாட்டு தலங்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசால் 314 கோவில்களுக்கு தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இதன் வழியே, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம், சுத்தமாகவும், சுகாதார முறையிலும் தயாரித்து வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.

தரச்சான்றிதழ் பெற்றதை பாராட்டும் வகையில், 10 கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் இணை ஆணையர்களை பாராட்டி, தரச்சான்றிதழ் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்,அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
25-ஜன-202212:39:10 IST Report Abuse
Ramesh Sargam தரச்சான்றிதழ்கள் கொடுப்பது மத்திய அரசின் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம். ஆனால், அதில் ஸ்டிக்கர் ஓட்டுவது ஸ்டாலின் அரசு. ஆஹா... பேஷ் பேஷ்...
Rate this:
Cancel
25-ஜன-202212:32:26 IST Report Abuse
ஆரூர் ரங் இது போல சர்ச் அப்பத்துக்கும் பள்ளிவாசல் நோன்புக் கஞ்சிக்கும்🤔 சான்றிதழ் வாங்க உத்தரவிட முடியுமா?
Rate this:
Cancel
25-ஜன-202212:32:36 IST Report Abuse
ஆரூர் ரங் இது போல சர்ச் அப்பத்துக்கும் பள்ளிவாசல் நோன்புக் கஞ்சிக்கும்🤔 சான்றிதழ் வாங்க உத்தரவிட முடியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X