பஸ்சில் மாணவர் ரகளை தடுக்க பொறுப்பாளர்கள்: உயர் கல்வி துறை உத்தரவு

Updated : ஜன 25, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை : 'பஸ்களில் ரகளை செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒவ்வொரு கல்லுாரியிலும் பொறுப்பு அதிகாரி நியமிக்க வேண்டும்' என, உயர் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், உயர் கல்வி துறை மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:மாணவர்கள் கல்லுாரிக்கு வரும்போது பஸ்களில் ரகளை செய்வதும், கூரை மேல்
bus, Students, college

சென்னை : 'பஸ்களில் ரகளை செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒவ்வொரு கல்லுாரியிலும் பொறுப்பு அதிகாரி நியமிக்க வேண்டும்' என, உயர் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், உயர் கல்வி துறை மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:மாணவர்கள் கல்லுாரிக்கு வரும்போது பஸ்களில் ரகளை செய்வதும், கூரை மேல் ஏறுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள், கடந்த காலங்களில் அதிகரித்துள்ளன.


latest tamil news



எனவே, இனி கல்லுாரி பஸ்களில், படிக்கட்டுகளில் தொங்குவது, ஜன்னல்களில் தொங்குவது என ரகளை செய்யும் மாணவர்களை அடையாளம் காண வேண்டும். அவர்களை பெற்றோருடன் அழைத்து, உளவியல் கவுன்சிலிங் அளிக்க வேண்டும். அவர்களது மோசமான நடத்தையை மாற்றி, கல்வியில் முன்னேற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு ஒவ்வொரு கல்லுாரியும், பொறுப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
25-ஜன-202213:58:38 IST Report Abuse
raja வாத்தியாரு பாடம் நடத்தவா இல்லை ஒவ்வரு மாணவனையும் நல்வழிப்படுத்தவா...எது அவர்களின் வேலை?....
Rate this:
Girija - Chennai,இந்தியா
25-ஜன-202217:04:26 IST Report Abuse
Girijaவாத்தி எங்க பாடம் நடத்துறாங்க ? வாதிகள் மாணவர்களை விட மோசம் ....
Rate this:
raja - Cotonou,பெனின்
25-ஜன-202219:09:12 IST Report Abuse
rajaவாத்தியார்களை அதுசெய் இது செய் என்று பாடம் நடக்காமல் மற்ற வேலைகளை கொடுத்தால் யார் பாடம் நடத்துவார்கள்......
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
25-ஜன-202211:43:25 IST Report Abuse
Girija மாநில கல்லூரியை பீச்சில் இருந்து இடம் மாற்றம் செய்து நகருக்கு வெளியே போடவேண்டும். இது போன்ற குற்றம் புரிந்தால் ஆதரில் பதிவு செய்வது காட்டாயமாக்க வேண்டும். பள்ளி சீருடையில் நடிகர்கள் காதல் செய்வதுபோன்று வரும் சினிமாக்களை தடை செய்ய வேண்டும். பரீட்சைக்கு மட்டும் கொரோன ஆன் லைன் மற்ற நேரம் கூத்தடிக்க ஆப் லைன். மதிப்பெண் சான்றிதழ் வழங்கும்போது அதில் ஆன்லைன் எக்ஸாம் என்று இனி வரும் காலங்களில் குறிப்பிட வேண்டும். அல்லது பட்டம் பெட்ரா பிறகு அகில இந்திய திறன் தேர்வில் தேர்ச்சிபெறுவது கட்டாயமாக்க படவேண்டும். ஆற்காட் ரோடு பெண்கள் கல்லூரியில் இருந்து போரூர் வரை பஸ் ஸ்டாப்பில் மாணவ மாணவிகள் அடிக்கும் கூத்து முகத்தை ஸ்லுளிக்க வைப்பதாக இருக்கிறது. பெற்றோர்கள் ரகசியமாக தங்கள் பிள்ளைகளை இந்த இடங்களில் நின்று கண்காணிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
25-ஜன-202210:32:58 IST Report Abuse
Ramesh Sargam வளர்ப்பு சரியில்லாத மாணவர்கள்தான் இதுபோன்று செய்வார்கள். ஆகையால், இதுங்களை பெத்த தாய், தந்தையருக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும். சரிப்பட்டுவரவில்லையா, அப்ப, எந்த கல்லூரியிலும் இடம் கிடைக்காமல் செய்திடவேண்டும். மேலும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து 'பாடம்' கட்பிக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X