தனியொரு மரம் தோப்பு ஆனது 16 கிளைகளுடன் அதிசய பனை

Added : ஜன 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஆர்.கே.பேட்டை; பதினாறு கிளைகளை கொண்ட அதிசய பனை மரம் தன் இணை மரத்தில் ஒன்றை இழந்து தன் அந்திம நாட்களை கழித்து வருகிறது. இந்த மூன்று மரங்களும் இதுவரை காய்த்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.பனை மரத்திற்கு கிளைகள் இல்லை என்பது இயற்கை. அரிதாக ஓரிரு மரங்களில் கிளைகள் முளைப்பது உண்டு.இந்நிலையில், ஆர்.கே.பேட்டை அடுத்த, கல்யாணபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில், பல்வேறு
 தனியொரு மரம் தோப்பு ஆனது 16 கிளைகளுடன் அதிசய பனை

ஆர்.கே.பேட்டை; பதினாறு கிளைகளை கொண்ட அதிசய பனை மரம் தன் இணை மரத்தில் ஒன்றை இழந்து தன் அந்திம நாட்களை கழித்து வருகிறது. இந்த மூன்று மரங்களும் இதுவரை காய்த்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.பனை மரத்திற்கு கிளைகள் இல்லை என்பது இயற்கை. அரிதாக ஓரிரு மரங்களில் கிளைகள் முளைப்பது உண்டு.இந்நிலையில், ஆர்.கே.பேட்டை அடுத்த, கல்யாணபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில், பல்வேறு கிளைகளுடன் இரண்டு பனை மரங்கள் உள்ளன.மொத்தம் இருந்த மூன்று மரங்களில், சில ஆண்டுகளுக்கு முன், ஒரு பனை மரம் அழிந்து போனது. தற்போது உள்ள இரண்டு மரங்களில் ஒரு மரத்தில் ஆறு கிளைகளும், மற்றொரு மரத்தில், 16 கிளைகளும் உள்ளன. 16 கிளைகள் கொண்ட தனியொரு மரமே, தோப்பு போல் காட்சியளிக்கிறது.ஆனாலும், இந்த மூன்று மரங்களுமே இதுவரையில் காய் காய்த்தது இல்லை என்பது வேதனையான உண்மை. இந்த அதிசய பனை மரங்களில் இருந்து, புதிய மரக்கன்றுகளை உருவாக்க முடியவில்லையே என்பது கிராமத்தினரின் ஆதங்கமாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
26-ஜன-202207:18:14 IST Report Abuse
Sai ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X