சென்னை : ''கிறிஸ்துவ பள்ளிகள் மத மாற்றும் கேந்திரங்களாக மாறிவிட்டதால், மதமாற்ற தடை சட்டத்தை, உடனே அமல்படுத்த வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
சென்னை கமலாலயத்தில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் நடந்திருக்கும் மூன்று, நான்கு பிரச்னைகள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. அரியலுார் மாவட்டத்தில் சிறுமியையும், அவரின் பெற்றோரையும் பள்ளி நிர்வாகத்தினர் மதம் மாற சொல்லி நிர்பந்தம் செய்து உள்ளனர். ஏற்க மறுத்த சிறுமியை இழிவுபடுத்தியதால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.
'சஸ்பெண்ட்''குழு அமைத்து ஒரு வாரத்தில் சிறுமியின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவோம்' என எஸ்.பி., கூறியுள்ளார். அதோடு நிறுத்தாமல் 'சிறுமி மரணத்தில் மதமாற்ற பிரச்னை இல்லை' என்றும் கூறி, இந்த முடிவைத் தான் விசாரணை குழு எடுக்க வேண்டும் என்பது போல பேசியுள்ளார். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், காஞ்சிபுரத்தில் உள்ள ஆண்டர்சன் பள்ளியில் திருநீறு, ருத்ராட்சம் அணிந்திருப்பது, ரவுடி போல இருப்பாத கூறி, இரு சகோதாரர்களை ஆசிரியர் அவமானப்படுத்தி உள்ளார். மமதை வேண்டாம்அந்த ஆசிரியர் மீது, அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், அரியலுார் சிறுமியை இழந்திருக்க மாட்டோம்.
கிறிஸ்துவ பள்ளிகள் மத மாற்றும் கேந்திரங்களாக மாறிவிட்டதால், உடனடியாக மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.இதை மக்களிடம் கொண்டு செல்வதற்காக, மாபெரும் மக்கள் தொடர்பு இயக்கத்தை ஹிந்து அமைப்புகள் மேற்கொள்ளும். அதற்கு பா.ஜ., உறுதுணையாக இருக்கும்.
தி.மு.க., ஆட்சி வந்ததில் இருந்து பல ஹிந்து கோவில்கள் இடிக்கப்படுகின்றன. தி.மு.க., 2 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் தான் ஆட்சி அமைத்தது; மமதை வேண்டாம்.இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE