குடியரசு தின விழா பள்ளிகளில் உண்டா?

Added : ஜன 25, 2022 | கருத்துகள் (1)
Advertisement
சென்னை : பள்ளிகளில் குடியரசு தின விழா மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் நடத்துவது குறித்து, எந்த அறிவிப்பும் வெளியாகாததால், ஆசிரியர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அதனால், குடியரசு தின கொண்டாட்டம் குறித்து, பள்ளி கல்வித் துறை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதேபோல், அன்றைய தினம், பெற்றோர் -

சென்னை : பள்ளிகளில் குடியரசு தின விழா மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் நடத்துவது குறித்து, எந்த அறிவிப்பும் வெளியாகாததால், ஆசிரியர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அதனால், குடியரசு தின கொண்டாட்டம் குறித்து, பள்ளி கல்வித் துறை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதேபோல், அன்றைய தினம், பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டத்தை நடத்துவதா, வேண்டாமா என்பதையும், அரசு அறிவிக்காமல் உள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், பள்ளிகளில் குடியரசு தின நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்படவில்லை என்பதால், குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அழைத்து, தேசிய கொடி ஏற்றலாமா என, பல பள்ளி நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethusubramaniam - chennai,இந்தியா
25-ஜன-202221:38:08 IST Report Abuse
sethusubramaniam குடியரசு தின வாழ்த்துக்கள் அந்நியராட்சி முடிந்து , நம்மவராட்சி மலர்ந்து கண்ணியமிக்க குடியரசு உருவான நாளிது . எழுபத்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம் எழுச்சி பெற்ற பாரதமென எண்ணிக் களிக்கின்றோம் . அடிமைத்தளை அறுக்க ஆருயிர் நீத்தோரின் அருமை ,பெருமைகளை அனைவரும் நினைப்போம் லட்சக் கணக்கானோர் தியாகங்கள் பலபுரிந்து லட்சியமொன்றே கொண்டு பெற்றோம் சுதந்திரம். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பதற்கு உற்ற வழியினிலே உற்சாகமாய் உழைப்போம் பார் போற்றும் பாரதத்தின் பாரம்பரியம் காப்போம். வேர்போன்ற நம் நாட்டின் கலாச்சாரம் காப்போம். பாரில் மிகப்பெரிய ஜனநாயக மென்னும் பேர் காப்போம் , இதன் பெருமை காப்போம். அண்டை நாடுகளையும் அரவணைத்துச் செல்வோம் சண்டை என்று வந்தாலோ சாகசத்தால் வெல்வோம். வேற்றுமையில் ஒற்றுமையைப் பேணுவது பெருமையாம் . போற்றி இதைப் பாதுகாத்தல் அனைவருககும் கடமையாம். தேசியக்கொடியேற்றி வணங்குதல் மட்டுமின்றி தேச நலனுக்கு உழைத்தல் தான் நமது தேசத்தை முன்னேற்றும் என்பதனை உணர்ந்து தேசப்பற்றோடு தினந்தோறும் வாழ்வோம். என் தேசம் என் உடைமை , என் தேசம் என் உரிமை . என் தேசம் என் பெருமை , இதைக் காப்பதென் கடமை . வந்தே மாதரம் வாழ்க பாரதம் . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அன்புடன் சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 26.01.2022
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X