ஹிந்தியில் பட்டம்; 7ம் வகுப்பு மாணவி சாதனை

Added : ஜன 25, 2022 | கருத்துகள் (8)
Advertisement
ஹிந்தி பிரசார சபா நடத்தும், ஒன்பது நிலை தேர்வுகளிலும் வெற்றி பெற்று, ஏழாம் வகுப்பு மாணவி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், ஹிந்தி இலக்கியத்தில் இளங்கலை பட்டம் முடிதத்ததற்கான அந்தஸ்தை பெற்றுள்ளார்.சென்னை, தி.நகரில், ஹிந்தி பிரசார சபா இயங்கி வருகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்நிறுவனத்தின் சார்பில், ஹிந்தி மொழி பேசப்படாத மாநிலங்களில், ஹிந்தி
 ஹிந்தியில் பட்டம்; 7ம் வகுப்பு மாணவி சாதனை

ஹிந்தி பிரசார சபா நடத்தும், ஒன்பது நிலை தேர்வுகளிலும் வெற்றி பெற்று, ஏழாம் வகுப்பு மாணவி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், ஹிந்தி இலக்கியத்தில் இளங்கலை பட்டம் முடிதத்ததற்கான அந்தஸ்தை பெற்றுள்ளார்.

சென்னை, தி.நகரில், ஹிந்தி பிரசார சபா இயங்கி வருகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்நிறுவனத்தின் சார்பில், ஹிந்தி மொழி பேசப்படாத மாநிலங்களில், ஹிந்தி பயிற்றுவிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும், ஒன்பது நிலை தேர்வுகளில் வெற்றி பெறுவோர், ஹிந்தி இலக்கியத்தில், இளங்கலை பட்டம் பெற்றதற்கான தகுதியை பெறுவர்.

இந்த தேர்வுகளை எழுத வயது வரம்பு கிடையாது. அந்த வகையில், சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த துரை ராஜன் - -மோகனசுந்தரி தம்பதியின் மகள் துர்கா,11 என்ற ஏழாம் வகுப்பு மாணவி, பரிச்சயா முதல் பிரவீன் வரை அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

--நமது நிருபர்--

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
27-ஜன-202206:51:53 IST Report Abuse
Sai ஹிந்தி இலக்கியத்தில்?? சீ சீ இந்த பழம் புளிக்கும்னு கதை என்னெல்லாம் இருக்கோ யாராவது பட்டியலிடுங்க
Rate this:
Cancel
keyjey - Jeddah,சவுதி அரேபியா
25-ஜன-202217:05:32 IST Report Abuse
keyjey துர்க்காவிற்கு வாழ்த்துக்கள். தமிழை தள்ளிவைத்த்துவிட்டு மற்ற மொழி கற்பது தவறு. தமிழுடன் சேர்த்து எத்துணை மொழி வேண்டுமானாலும் கற்பது என்றும் சிறப்பே. மொழி ஞானத்தை அரசியலுக்குள் அடக்குவது நல்லதல்ல . என்னுடைய அனுபவத்தில் ஹிந்தி அல்லது உருது மொழி இந்தியாவை தாண்டி , மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
25-ஜன-202215:06:21 IST Report Abuse
தமிழன் எதோ கருகுற வாட வருதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X