முகக்கவசம் இல்லையா... ரூ.500 அபராதம்: வாய், மூக்கு மறைக்காவிட்டாலும் நடவடிக்கை

Updated : ஜன 25, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (6)
Advertisement
சென்னை: சென்னையில், முகக் கவசம் அணியாதவர்களுக்கு, 200 ரூபாய் முதல், 500 ரூபாயாக அபராத கட்டணம் வசூலிக்கப்படுவது நேற்று முதல் துவங்கியது. வாய், மூக்கு வரை முழுமையாக முக கவசம் அணியாதவர்களுக்கும் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும், மக்கள் முகக் கவசம் அணியாமல் அலட்சியம் காட்டுவது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்னையில், முகக் கவசம் அணியாதவர்களுக்கு, 200 ரூபாய் முதல், 500 ரூபாயாக அபராத கட்டணம் வசூலிக்கப்படுவது நேற்று முதல் துவங்கியது. வாய், மூக்கு வரை முழுமையாக முக கவசம் அணியாதவர்களுக்கும் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.latest tamil newsதமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும், மக்கள் முகக் கவசம் அணியாமல் அலட்சியம் காட்டுவது தொடர்கிறது.எனவே, அனைவரையும் முககவசம் அணிய வைக்கவும், கொரோனா பரவும் வேகத்தை குறைக்கவும், தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில், இனி முககவசம் அணியாதோருக்கு, 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, தெரிவித்திருந்தது.
சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில், ஏற்கனவே, 200 ரூபாய் அபராதத்திற்கான ரசீது இருந்ததால், அவற்றை மாற்றி, 500 ரூபாய்க்கான ரசீதாக அச்சிட, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.அந்த ரசீது அச்சிடப்பட்டு தயாராக உள்ளதால், முககவசம் அணியாதோருக்கு, இன்று முதல் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.


latest tamil newsஇதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், முககவசம் அணியாதோரிடம் இருந்து, கடந்த டிச., 31ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, 70.23 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
முககவசம் அணியாதோருக்க 500 ரூபாய் அபராதம் விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், ௨௦௦ ரூபாய் அபராத ரசீதுகள் மட்டுமே இருந்ததால், இந்த ரசீதை வழங்கி, 500 ரூபாய் வசூலித்தால் குழப்பம் ஏற்படும். எனவே, 5௦௦ ரூபாய்க்கான ரசீது புதிதாக அச்சிடப்பட்டது.
அவை, அச்சிடப்பட்டு வந்துள்ளதால், இன்று முதல் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும், முககவசம் அணியாதோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சென்னையில் சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இவற்றை மேலும் குறைக்க, பொதுமக்கள் அனைவரும், முககவசத்தை, வாய், மூக்கை மூடியப்படி முழுவதுமாக அணிய வேண்டும். அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25-ஜன-202211:51:33 IST Report Abuse
அசோக்ராஜ் என் அண்ணன் மகள் கலாக்ஷேத்ராவில் கற்கிறாள். போன வாரம் போயிருந்தேன். திருவான்மியூரிலிருந்து கலாக்ஷேத்ரா வரை சாலைகளெங்கும் சாக்கடை வழிந்தோட, அபார்ட்மெண்ட்டுகளிலிருந்து மோட்டார் வைத்து சாக்கடையை வெளியேற்றிக் கொண்டு இருந்தார்கள். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து ஊழியர்களின் சிறுநீர் மலக் கழிவுகள் பிரதான சாலையில் வெள்ளமாகப் பாய்ந்து தேங்கிக் கொண்டு இருக்கிறது. ஸோ கால்டு விஐபி ஏரியாவாம். சென்னை மாநகராட்சி ஒளிக இதில் மாஸ்க் இல்லாத குடிமகன் குற்றவாளியாம். ஐநூறு அபராதமாம். விடியலுக்கு ஓட் போட்ட சென்னைத் தெலுங்கனுகளுக்கு இது வேண்டியதுதான்.
Rate this:
Cancel
25-ஜன-202210:47:03 IST Report Abuse
ஆரூர் ரங் உ.பி சுக்கு விதிவிலக்குண்டு😛
Rate this:
Cancel
25-ஜன-202210:47:10 IST Report Abuse
ஆரூர் ரங் உ.பி சுக்கு விதிவிலக்குண்டு😛
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X