நீங்கள் செய்தால் மட்டும் ரத்தம்; பிறர் செய்தால் தக்காளி சட்னியா...

Updated : ஜன 25, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (24)
Advertisement
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: அரியலுார் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில், மத மாற்றம் என்ற பெயரில், வெறுப்பு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தை பாதுகாக்க, வெறுப்பு பிரசாரத்துக்கு எதிராக சட்டமியற்ற வேண்டும்.அரியலுார் மாணவி அனிதாவை மறந்து விட்டீர்களா... நீங்கள் செய்தால் மட்டும் ரத்தம்; பிறர் செய்தால் தக்காளி சட்னியா...' என, சங்
திருமாவளவன், காமராஜ்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: அரியலுார் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில், மத மாற்றம் என்ற பெயரில், வெறுப்பு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தை பாதுகாக்க, வெறுப்பு பிரசாரத்துக்கு எதிராக சட்டமியற்ற வேண்டும்.


அரியலுார் மாணவி அனிதாவை மறந்து விட்டீர்களா... நீங்கள் செய்தால் மட்டும் ரத்தம்; பிறர் செய்தால் தக்காளி சட்னியா...' என, சங் பரிவார் அமைப்பினர் கேட்கின்றனரே!



அ.தி.மு.க., முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி: 'ஆன்லைன்' வாயிலாக நெல் கொள்முதல் செய்யப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது, தேவையற்றது. எனவே, எளிய முறையில் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


அதற்கு முன், 'போதிய நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்; கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பாக கிடங்குக்கு கொண்டு செல்ல வேண்டும்' என்றும் குரல் கொடுங்களேன்!



போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் சங்க மாநில தலைவர் கதிரேசன் பேட்டி: அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வுபெற்ற, 85 ஆயிரம் பேருக்கு, 2015 முதல் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நுாறு நாட்களில் வழங்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்; இன்னும் வழங்கவில்லை.


தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வராது என்ற எண்ணத்தில், முதல்வர், இஷ்டத்திற்கு அள்ளி விட்டு விட்டாரோ... ஏராளமானோர் புகார் கூறுகின்றனரே!



தமிழக பா.ஜ., பொருளாளர், எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: தமிழகத்தில், கொரோனா ஊரடங்கின் போது, 'டாஸ்மாக்' மதுக்கடைகளை மூட வேண்டாம். ஏனெனில், அதை காரணமாக வைத்து, தி.மு.க.,வினர் சிலர் கொள்ளை விலைக்கு மதுபானங்களை விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். அவர்களுக்குத் தான் ஊரடங்கு லாபகரமாக அமைந்துள்ளது.


latest tamil news




நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது, 'நல்லவேளை, வாரத்தின் ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் கடைகள் பூட்டப்படுகின்றன... இல்லையேல்...' என, எண்ணத் தோன்றுகிறதே!



ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேட்டி: இந்திய பொருளாதாரத்தில் நம்பிக்கை தரும் சில அம்சங்கள் இருந்தாலும், கவலை தரக்கூடிய பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.


இரண்டும் இருப்பது தான் பொருளாதாரம். அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் பொருளாதாரங்களும் இப்படித் தானே இருக்கின்றன!


Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karupanasamy - chennai,இந்தியா
25-ஜன-202216:03:08 IST Report Abuse
karupanasamy குருமா மாதிரி ஒரு அயோக்கிய பயலை இந்த மனித இனத்தில் பார்க்க முடியாது.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
25-ஜன-202216:18:41 IST Report Abuse
கல்யாணராமன் சு.அப்போ, அவரை மனித இனத்தில் சேக்குறீங்க ??...
Rate this:
Cancel
velan - california,யூ.எஸ்.ஏ
25-ஜன-202216:00:16 IST Report Abuse
velan …..
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
25-ஜன-202215:33:55 IST Report Abuse
Narayanan தியாகராஜன் பதவியேற்றபின் ஓரியு நிருபரின் கேள்விக்கு இத்தனை வாக்குறுதி அளிக்கப்பட்டு இருக்கிறதே என்றதற்கு நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று நினைக்கவில்லை . இப்போ என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆக அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியாது அரசின் வருமானம் கூடியபோதும் .என்ன செய்ய வருமானத்தில் இவர்களின் பங்கே முப்பது சதவிகிதம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X