வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: பணவீக்கம் தொடர்பாக கேள்வி எழுப்பிய அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரை அதிபர் பைடன் தகாத வார்த்தைகளால் திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில், உள்ள வெள்ளை மாளிகையில் விலைவாசியை கட்டுப்படுத்துவது குறித்து அதிபர் ஜோ பைடன் நிருபர்களை சந்தித்தார்.அப்போது பாக்ஸ் நியூஸ் நாளிதழின் நிருபர் பீட்டர் டூசி, பணவீக்கம் உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது பைடன், ''இது மிகப்பெரிய சொத்து, மேலும் பணவீக்கம்?'' எனக்கூறியவாறு தகாத வார்த்தைகளால் திட்டினார். தனது இருக்கை அருகே உள்ள மைக்ரோபோன் செயல்பாட்டில் இருந்ததை பைடன் கவனிக்கவில்லை. மேலும் அனைத்தும் அங்கிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. நிகழ்ச்சியில் இருந்த சத்தம் காரணமாக பைடன் திட்டியது பத்திரிகையாளருக்கு சரியாக கேட்கவில்லை.
இதன் பின்னர் அந்த பத்திரிகையாளரை, தனிப்பட்ட முறையில் பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE