கொளத்துார் தொகுதியில் அடங்கிய 25க்கும் மேற்பட்ட பூங்காக்களின் பராமரிப்பு பணி டெண்டரில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், அதன் மதிப்பீட்டு அட்டவணையின்படி மறு ஒப்பந்தம் விடும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை மனு வழங்கி உள்ளனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது:
கொளத்துார், திரு.வி.க.., நகர் தொகுதிகளில் அடங்கிய சென்னை மாநகராட்சி மண்டலம் 6க்குட்பட்ட அனைத்து பூங்காக்களின் பராமரிப்பு பணி ஆன்லைன் டெண்டர் கோரப்பட்டு, திறக்கப்பட்டது. டெண்டரில் குறிப்பிட்ட மதிப்பீட்டில் குளறுபடி நடந்துள்ளது என, ஆய்வின் அடிப்படையில், அதை ரத்து செய்து, மறு டெண்டர் அறிவித்து பணியை தொடர சென்னை மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவை ஏற்று, மண்டலம் 8 (அண்ணாநகர்) மண்டலம் 9 (வள்ளுவர் கோட்டம்) ஆகிய மண்டலங்கள் முந்தைய டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டரை கோரவுள்ளது.ஆனால், மண்டலம் 6ல் உள்ள 25க்கு மேற்பட்ட பூங்காக்களின் பராமரிப்பு பணிக்கான டெண்டரை மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டும் ரத்து செய்யவில்லை.எனவே, முந்தைய டெண்டர ரத்து செய்து, புதிய மதிப்பீட்டு அட்டவணையின்படி மறு ஒப்பந்தம் விடும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE