வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தேர்தல் நடைமுறைகளில் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நமோ செயலி வாயிலாக பா.ஜ., தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தேசிய வாக்காளர் தினம் குறித்து பேசியதாவது: தேர்தல் செயல்முறைகளில் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும்,நோட்டீஸ் அனுப்பவும், தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஜனநாயகம் என்பது மாற்று கருத்து தெரிவிப்பது; அமைதியாக எதிர்ப்பு தெரிவிப்பது; சமூக நீதி; உங்கள் ஒவ்வொருவருக்குமான ஓட்டு; உங்கள் உரிமைகளை யாரும் நசுக்காமல் இருக்க ஓட்டு போடுங்கள். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE