வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவில் மொத்தம் 95.3 கோடி வாக்காளர்கள் உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி 12வது தேசிய வாக்காளர் தினம் இன்று (ஜன.,25) கொண்டாடப்பட்டது. இது தொடர்பான நிகழ்ச்சியில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா பேசியதாவது: இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நேரத்தில் நாட்டில் தகுதி வாய்ந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. 18 சதவீத கல்வியறிவு விகிதம் கொண்ட, புதிதாக சுதந்திரம் அடைந்த நாட்டில், இது உண்மையிலேயே தீவிரமான நடவடிக்கையாகும்.

இந்தியாவில் தற்போது 95.3 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். அதில் 49 கோடி ஆண் வாக்காளர்களும், 46 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். இதில், 1.92 கோடி மூத்த குடிமக்களும் அடங்கும். தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் தடுப்பூசியின் வேகத்தை அதிகரிக்க வலியுறுத்தியுள்ளோம். இந்தத் தேர்தல் முற்றிலும் பாதுகாப்பாக நடந்திட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE