அதிகரித்து வருகிறது கொரோனா... தொழில் நிறுவனங்களுக்கு சவால்

Updated : ஜன 25, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
கோவை: பண்டிகை விடுமுறை முடிந்து, கோவையில் அனைத்து தொழில் நிறுவனங்களும் முழு வீச்சில் செயல்பட உள்ள நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவது, தொழில் துறைக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) தலைவர் ரமேஷ் பாபு கூறுகையில், ''தொற்று பரவல் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தொழில்

கோவை: பண்டிகை விடுமுறை முடிந்து, கோவையில் அனைத்து தொழில் நிறுவனங்களும் முழு வீச்சில் செயல்பட உள்ள நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவது, தொழில் துறைக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news




கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) தலைவர் ரமேஷ் பாபு கூறுகையில், ''தொற்று பரவல் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தொழில் நிறுவனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. சளி, காய்ச்சல் பாதிப்புள்ள தொழிலாளர்கள், நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு, தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்,'' என்றார்.

தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா ) தலைவர் கார்த்திக் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களில் 90 சதவீதத்தினர், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டனர். தொற்று பரவல் தொடர்பாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து தொழில் நிறுவனங்களும் சீரான முறையில் பின்பற்றுகிறோம். கோவை மாவட்டத்தில் சில நாட்களாக தொற்று பரவல் அதிகரித்து வருவதால், எதிர்வரும் வாரங்களில் தொழில் துறையினர் மிகுந்த சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,'' என்றார்.

தமிழ்நாடு ஊரக மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் நோய் தொற்று பரவல் அதிகரித்து வந்தாலும், தற்போது வரை தொழில் நிறுவனங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை,'' என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yesappa - Bangalore,இந்தியா
27-ஜன-202211:51:55 IST Report Abuse
Yesappa ஆமா .. ஸ்கூல் திறந்தா தான், நாங்க கான்வேர்சன் வேலை ஆரம்பிக்க முடியும். ஐயா இதனை பிள்ளை எங்க ஸ்கூலில் படிக்கிறார்கள் .. காசு குடுங்கன்னு கேட்க முடியும்
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
25-ஜன-202215:01:25 IST Report Abuse
தமிழன் எதோ இந்த கொரோனா தமிழ்நாட்டுல பல்க்கா கொறஞ்சு பள்ளிக்கூடம் எல்லாம் தொறக்கப்போறதா சொல்லறானுகளே? இல்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X