காங்.,கில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்பிஎன் சிங்

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
புதுடில்லி: காங்., மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்பிஎன் சிங், காங்கிரசில் இருந்து விலகினார். ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் சோனியாவுக்கு அனுப்பி வைத்தார். அவர் பா.ஜ.,வில் இணைந்தார். உ.பி., சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு முக்கிய பிரமுகர்கள் வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு உ.பி.,யில் காங்கிரஸ்
Congress, RPNSingh, Quit, BJP,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: காங்., மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்பிஎன் சிங், காங்கிரசில் இருந்து விலகினார். ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் சோனியாவுக்கு அனுப்பி வைத்தார். அவர் பா.ஜ.,வில் இணைந்தார்.

உ.பி., சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு முக்கிய பிரமுகர்கள் வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு உ.பி.,யில் காங்கிரஸ் கட்சியில் முக்கியமானவராக கருதப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா விலகி பா.ஜ.,வில் இணைந்து மாநில அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரும், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் உள்துறை இணை அமைச்சர் பதவி வகித்த ஆர்பிஎன் சிங் காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தற்போது உ.பி.,யின் பத்ராவுனா தொகுதி எம்.பி.,யாக இருக்கும் ஆர்பிஎன் சிங், கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை அக்கட்சி தலைவர் சோனியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.


latest tamil news


அதில், காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக விலகி கொள்வதாகவும், கட்சிக்கும், மக்களுக்கும் சேவையாற்ற வாய்ப்பளித்ததற்கு நன்றி என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், நமது குடியரசு தினத்தை கொண்டாட உள்ள நிலையில், அரசியல் பயணத்தில் புதிய பயணத்தை துவக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில், ஆர்பிஎன் சிங் பா.ஜ.,வில் இணைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
27-ஜன-202212:45:38 IST Report Abuse
sankar அரசியல் குரங்குகள், வெட்கங்கெட்ட ஜென்மங்கள். பீஜெபீ இனி உருப்படும்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-ஜன-202204:32:36 IST Report Abuse
J.V. Iyer நல்லவர்களுக்கு காங்கிரசில் இடமில்லை என்பது வெட்டவெளிச்சம்.
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
26-ஜன-202200:27:46 IST Report Abuse
Venkatakrishnan எல்லா கயவர்களும் பாஜகவில் இணைய காரணம் என்ன...? உங்கள் ஏழைத்தாயின் மகனாருக்கு இதெல்லாம் தெரியாதா சங்கிகளா...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X