அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கலாமா! மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
புதுடில்லி: தேர்தல் நேரங்களில் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதில் விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பா.ஜ.,வை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில் கூறியதாவது: தேர்தல் விதிகளை மீறி பொது மக்களின் பணம்
உச்சநீதிமன்றம், சுப்ரீம் கோர்ட், இலவசங்கள், அரசியல்கட்சிகள், தேர்தல் ஆணையம், மத்திய அரசு, நோட்டீஸ், இலவசங்கள்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தேர்தல் நேரங்களில் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதில் விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பா.ஜ.,வை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில் கூறியதாவது: தேர்தல் விதிகளை மீறி பொது மக்களின் பணம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. பொது மக்களின் பணம் மூலம், இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிப்பது, வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும், இது நேர்மையான சுதந்திரமான தேர்தல் என்ற அடித்தளத்தை அசைப்பதுடன், தேர்தல் செயல்முறையின் தூய்மையை கெடுப்பதுடன் சமநிலையை சீர்குலைக்கிறது.

தேர்தலை கொண்டு இலவசங்களை அறிவிப்பது, ஜனநாயகம் புத்துயிர் பெறுவதற்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதுடன், அரசியல்சாசனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பதற்காக, தேர்தல் நேரத்தில் அரசின் கஜானாவில் இருந்து இலவசங்களை அறிவிப்பது முறையற்ற நடவடிக்கை. பொதுமக்களின் பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன் தேர்தல் சின்னங்களை முடக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி என்வி ரமணா, ஏஎஸ் போபண்ணா, ஹிமோ கோலி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


latest tamil news


அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது: குறைந்த நம்பிக்கையுடன், பல்வேறு விவகாரங்களில் விதிமுறைகளை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கிறோம். நீதிமன்றத்தின் உத்தரவிற்கு பிறகு ஒரு முறை ஆலோசனை நடத்தும் தேர்தல் ஆணையம், பின்னர் அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்கிறது. அதற்கு பிறகு என்ன நடக்கிறது என எங்களுக்கு தெரியவில்லை. இலவசங்களுக்கான பட்ஜெட், வழக்கமான பட்ஜெட்டை விட அதிகமாக செல்கிறது. எனவே இலவசங்கள் என்பது முக்கியமான விஷயம். அரசியல் கட்சிகள் இலவசங்களை விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக மத்திய அரசு, தேர்தல் ஆணையம் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.SRIRAM - CHENNAI,இந்தியா
25-ஜன-202223:57:10 IST Report Abuse
C.SRIRAM மிக மிக தாமதமான புரிதல் . பெரும்பாலான அரசியல் கட்சிகள் இலவசம் என்கிற பெயரில் வரி பணத்தை சொந்த பணம் போல இஷ்டத்துக்கு வாரி விடும் வகையில் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கிறார்கள் . இதற்கு இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.இலவசம் என்கிற பெயரில் மக்கள் சோம்பரீகளாக்க படுகிறார்கள். இதை எல்லவிதமாகவும் முழுமையாக தடுக்க கண்டிப்பான நடவடிக்கைகள் உடனடி தேவை .
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
25-ஜன-202221:12:59 IST Report Abuse
S.Baliah Seer யுவர் ஹானர் இந்த இலவசங்களுக்கு மக்கள் ஏமாறுவது இல்லை.ஆனால் துட்டுக்கு ஒட்டு கலாச்சாரம் பெருகிவிட்டது.அதைவிட மோசம் தேர்தல் கருத்துக் கணிப்புக்கள்.இவற்றை வெளியிடுவது ஊடகங்களின் அடிப்படை உரிமையல்ல.கருத்துக்கணிப்பு சமுதாய மோசடி.இந்த மோசடிச் செயலை தேர்தல் ஆணையமும்,உச்ச நீதிமன்றமும் தடை செய்யாதது ஏன்?
Rate this:
Cancel
25-ஜன-202219:58:54 IST Report Abuse
theruvasagan ரூவாய்க்கு மூணு படி என்ற அண்டப் புளுகு ஆகாசப் புளுகுதான் இதுக்கெல்லாம் பிள்ளையார் சுழி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X