மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Added : ஜன 25, 2022 | |
Advertisement
சேலம்: கட்டாய மத மாற்றத்தால், மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், இந்து முன்னணி சார்பில், சேலத்தில், நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் தலைமை வகித்தார். மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வரவும், தி.மு.க., அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். பின்னர், சந்தோஷ்குமார் கூறியதாவது: தான் பிறந்த இந்து மதத்திற்கு, துரோகம்

சேலம்: கட்டாய மத மாற்றத்தால், மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், இந்து முன்னணி சார்பில், சேலத்தில், நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் தலைமை வகித்தார். மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வரவும், தி.மு.க., அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். பின்னர், சந்தோஷ்குமார் கூறியதாவது: தான் பிறந்த இந்து மதத்திற்கு, துரோகம் செய்யமாட்டேன் என கூறி, கடைசிவரை மதம் மாறாமல், இன்னுயிர் நீத்த மாணவி தான், இந்துக்களின் குல தெய்வம். இந்து விரோத தி.மு.க., அரசில், மாணவியின் மரணம், நமக்கு இறுதி மரணமாக இருக்க வேண்டும். நீட் விவகாரத்தில், இறந்த மாணவி அனிதா, கொல்லப்பட்டாள் என கூறி, ஸ்டாலின், வைகோ நேரில் சென்று ஆறுதல் கூறினர். எல்லா கட்சிகளும் வரிசைக்கட்டி சென்றன. விஜய் ஜோசப், இரவில் சென்று பார்த்தார். ஆனால், இப்போது, எந்த கட்சிகளும்; தலைவர்களும், வாய்திறக்கவில்லை. எங்கு கொடுமை நடந்தாலும், அதற்கு குரல் கொடுக்கும் எம்.பி., கனிமொழி, மாணவி பற்றி ஏன் பேசவில்லை. மாணவி மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம். அவரது குடும்பத்துக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காலத்தின் கட்டாயத்தால், தமிழகத்தில், மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X