தாரமங்கலம்: தாரமங்கலம் கருக்கல்வாடியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 27; கம்பி கட்டும் வேலை செய்கிறார். மனைவி நந்தினி, 24, மகன், ரக்ஸித்,4. இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளாகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு, நந்தினி தன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலையில், தாலிக்கொடி மற்றும் மிஞ்சியை கழற்றி வைத்துவிட்டு நந்தினி வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டதாக தகவல் அறிந்த, மணிகண்டன் பல இடங்களில் மனைவியை தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தாரமங்கலம் போலீசில் தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார். வாலிபர் மாயம்: கருக்கல்வாடி பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் கவுதம்,19; கூலிவேலை. நேற்று அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்த கவுதம் காணவில்லை எனவும், உறவினர் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் காணவில்லை என்று, ஏழுமலை தாரமங்கலம் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார். தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE