அபூர்வ சகோதரர்களே.. உங்களுக்கு ஒரு சபாஷ்

Updated : ஜன 25, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (2)
Advertisement
கடந்த 2003 ம் வருடம் ஜூன் மாதம் 14 ம் தேதிபுதுடில்லியில் சுசேதா கிருபாளானி அரசு மருத்துவமனையில் ஒரு ஏழைத்தாய்க்கு இரட்டைக்குழந்தை பிறந்ததுஒட்டிப்பிறந்த இந்த இரட்டைக்குழந்தைகளை பாரமரிக்கவோ வளர்க்கவோ முடியாது என்று நினைத்த பெற்றோர், ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் குழந்தையை ஆஸ்பத்திரியிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.ஒட்டிப்பிறந்த இந்த



latest tamil news


கடந்த 2003 ம் வருடம் ஜூன் மாதம் 14 ம் தேதி
புதுடில்லியில் சுசேதா கிருபாளானி அரசு மருத்துவமனையில் ஒரு ஏழைத்தாய்க்கு இரட்டைக்குழந்தை பிறந்தது
ஒட்டிப்பிறந்த இந்த இரட்டைக்குழந்தைகளை பாரமரிக்கவோ வளர்க்கவோ முடியாது என்று நினைத்த பெற்றோர், ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் குழந்தையை ஆஸ்பத்திரியிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.


latest tamil news


ஒட்டிப்பிறந்த இந்த இரட்டையர்களுக்கு இரண்டு இதயங்கள், இரண்டு ஜோடி கைகள், இரு சிறுநீரகங்கள் மற்றும் இரு முதுகெலும்புகள் உள்ளன, ஆனால் ஒரு கல்லீரல், ஒரு பித்தப்பை, ஒரு மண்ணீரல் மற்றும் ஒரு ஜோடி கால்கள் மட்டுமே உள்ளன.


latest tamil news


இந்த அபூர்வ இரட்டை குழந்தைகள் அரசு மருத்துவமனையில் இருந்து டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர், அங்குள்ள மருத்துவ நிபுணர்கள் இரட்டை குழந்தைகளை பரிசோதித்துவிட்டு, குழந்தைகளை பிரித்தால் ஒரு குழந்தை உயிரை இழக்க நேரிடும் மேலும் பிழைக்கும் குழந்தைக்கும் மூட்டு மற்றும் ரத்த நாளங்கள்,நரம்புகளில் பிரச்னை ஏற்படும் ஆகவே ஒட்டிப்பிறந்த நிலையிலேயே வளர்வதுதான் பிரிப்பதைவிட சரியாக இருக்கும் என்று சொல்லிவிட்டனர், கூடவே இந்த இரட்டையர்களுக்கு சோனா மற்றும் மோனா என பெயரிட்டனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள அகில இந்திய பிங்கல்வாரா நற்பணி மன்றத்தினர் இந்த இரட்டை குழந்தைகளை தத்தெடுத்து தங்கள் பொறுப்பில் வளர்த்தனர்.சோனா-மோனா இரட்டையர்களும் நம்பிக்கைதரும் மாற்றுத்திறனாளிகளாக வளர்ந்தனர்.அங்குள்ள ஐடிஐயில் எலக்ட்ரீஷியன் படிப்பை முடித்தனர்.
இவர்களைப்பற்றி அறிந்த பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரிகள் இவர்களை நேரில் பார்த்து இவர்களது பணித்திறனைகண்டு வியந்து அரிதான ஊனமுற்ற நபர்களுக்கான வேலை வாய்ப்பில் கீழ் அவர்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ளனர்.
19 வயதான இந்த இரட்டையர்கள் இப்போது பஞ்சாப் அரசின் மின் இலாகவில் பணிபுரிகின்றனர், ஆரம்ப சம்பளம் 20 ஆயிரம் ரூபாய், கடந்த டிசம்பர் மாதம் வேலையில் சேர்ந்து சில நாட்களிலேயே திறமையானவர்கள், வேலைக்கு பொருத்தமானவர் என்று பெயர் பெற்றுள்ளனர்.
தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக பஞ்சாப் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சோனாவும் "நாங்கள் மிகுந்த நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் கடினமாக உழைப்போம்" என்று மோனாவும் கூறினர்."எங்களை வளர்த்து, தொழில் கல்வி கொடுத்து, சுயசார்புடையவர்களாக மாற உதவிய பிங்கல்வாரா நிறுவனத்திற்கும் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றனர்.
பெற்றவர்களே உதறினாலும் அதுபற்றி கவலையின்றி தங்கள் மீதும் தங்கள் உழைப்பின் மீதும் மட்டுமே கவனம் கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்திருக்கும் இந்த இரட்டையர்களுக்கு நாமும் வாழ்த்தை கூறுவோம்.
-எல்.முருகராஜ்


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
26-ஜன-202212:23:11 IST Report Abuse
raja ஆண்டவன் அருளால் இவர்கள் நீடூடி வாழவேண்டும்...
Rate this:
Cancel
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
26-ஜன-202209:42:45 IST Report Abuse
abdulrahim இறைவன் கிருபையால் நீடுழி வாழ வேண்டும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X