இலங்கை சிறையிலிருந்து 55 தமிழக மீனவர்கள் விடுதலை

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
கொழும்பு: இலங்கை சிறையில் உள்ள 55 தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை, ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்களை கடந்த டிசம்பர் 18, 20ம் தேதிகளில் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்பினர்
Tamilnadu, Fishermans, Srilanka, Releases, தமிழகம், மீனவர்கள், கைது, இலங்கை, விடுதலை

கொழும்பு: இலங்கை சிறையில் உள்ள 55 தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை, ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்களை கடந்த டிசம்பர் 18, 20ம் தேதிகளில் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.


latest tamil news


இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று இலங்கை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கைது செய்யப்பட்ட 55 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மீனவர்கள் பயன்படுத்திய 8 படகுகளின் உரிமையாளர்கள் வரும் ஏப்.,1ம் தேதி ஆஜராக வேண்டும் எனவும், இந்த வழக்கு விசாரணை ஏப்.,1ல் நடைபெறும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
26-ஜன-202200:27:29 IST Report Abuse
Soumya நம்பில் விடியல் மீனவ நண்பர்களுக்காக கச்சத்தீவை மீட்டெடுப்பர் ஹீஹீஹீ
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
25-ஜன-202221:39:20 IST Report Abuse
Easwar Kamal இந்தியா இலங்கை இடையே இவளவு பிரச்னை உள்ளதையே. இலங்கை கப்பல் படை சர்வ சாதாரணமாக நம் இந்திய பக்கம் வந்து மீனவர்களை அல்லி கொண்டு போகிறது ஏன் ஒரு இந்தியா கப்பல் படை இந்த பக்கம் எல்லாம் வருவதே கிடையாதா. அல்லது நம் தமிழக அரசு ஏதாவது ஒரு படை உருவாக்கி இந்தியா அரசிடம் ஒப்புதல் பெற்று நம் மீனவர்களை காக்கவேண்டும். எவ்வளவு வருடம்தான் இந்த ப்ரிச்சனையை எதிர் கொள்ளுவது.
Rate this:
26-ஜன-202210:25:28 IST Report Abuse
ஆரூர் ரங்திருடப்படுவது ஏழை வட இலங்கை தமிழ் கட்டுமர மீனவர்களின்🤫 வாழ்வாதாரம். அவர்களுக்கு உதவ இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுப்பது நியாயமே. நம் ஆட்கள் எல்லை தாண்டி சுருக்கு மடி வலை, இரட்டை வலை போட்டு சுரண்டுவதற்கு முட்டுக்🙄 கொடுக்கலாமா?...
Rate this:
Cancel
அருணாசலம், சென்னை ஏப்ரல் 1ம் தேதி எட்டு படகு சொந்தக்காரர்கள் கைது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X