நடிகர் விஜய்க்கு எதிரான எதிர்மறை கருத்துகளை நீக்கியது உயர்நீதிமன்றம்

Updated : ஜன 25, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்ததுடன், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும். அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக

சென்னை: ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்ததுடன், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும். அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதில், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது சபீக் ஆகியோர், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
26-ஜன-202205:07:29 IST Report Abuse
thonipuramVijay காரில் , வரி கட்டமுடியாமல் நீதிமன்றத்தில் பிட்சை கேட்டு ..நீதி பதியிடம் வசவு வாங்கி பின் வரி அபராததுடன் காட்டியவர் என்று போர்டு வைத்து ஓட்ட சொல்லுங்கள்
Rate this:
Cancel
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜன-202220:56:14 IST Report Abuse
HONDA நீதிபதி நடிகரோட தாழந்துவிட்டார் இந்த தீர்ப்பால்
Rate this:
Cancel
Matram Ondre Marathathu - Chennai,இந்தியா
25-ஜன-202219:09:30 IST Report Abuse
Matram Ondre Marathathu பணத்திற்காக படத்தில் நடிப்பவர்கள் அவர்கள் தொழில். படத்தில் வேண்டுமானால் உண்மையான நாணயமான ஹீரோவாக இருக்கலாம். எல்லாம் புகழ் போதை. புகழ் இருக்கும் வரை அனுபவித்து அது போன உடன் ரோட்டில் சென்றாலும் திரும்பி பார்க்க நாதி இருக்காது. பப்ளிக் ஸ்டண்ட் அடிப்பதில் அவர்களை மிஞ்ச ஆளே இல்லை. இதை அந்தந்த நடிகரின் வெறித்தனமான ரசிகர்கள் உணர வேண்டும். திங்க சோறு இல்லாட்டியும் எங்க தலைவன் படம் ரிலீஸ் ஆகும் போது பிச்சை எடுத்தாவது இரண்டாயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கி கூவி கொக்கரித்து அடுத்த நாள் உங்க தலைவன் சோறு போடுவானா??? அவன் ஏசி போட்டு சாப்பிட்டு தூங்கிருவான். நீ ???? படம் பாரு புடிச்சா ரசி இல்லையா போயிட்டே இரு. நீ உழைத்தால் சோறு அது தான் நிதர்சன உண்மை. நடிக்கிறவன் எல்லாம் டுபாக்கூர் என்று எங்கள் ஊரில் சொல்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X