நீட் தேர்வால் மருத்துவ கல்லூரிகளில் அதிகளவில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள்- கவர்னர்

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (67) | |
Advertisement
சென்னை: நீட் தேர்விற்கு பிறகு கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால், அரசு மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் ரவி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்துவதே தற்போதைய அவசர தேவை. அரசு மற்றும்
Governor,NEET exam,medical entrance test,ஆளுநர்,கவர்னர்,நீட்

சென்னை: நீட் தேர்விற்கு பிறகு கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால், அரசு மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் ரவி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்துவதே தற்போதைய அவசர தேவை. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையேயான எதிர்மறை வேறுபாடுகள் கவலையை ஏற்படுத்துகிறது. தனியார் பள்ளிகளில் அரசு ஏழைகள் சேர முடியாது. அரசு பள்ளிகள் மட்டுமே அவர்களது நம்பிக்கை. நீட் தேர்விற்கு முன்னர் ஒரு சதவீதத்திற்கு குறைவாகவே அரசு பள்ளி மாணவர்கள், அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தனர். தற்போது 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உயர்கல்வியில் நமது பல்கலைக்கு இருந்த பெயரையும், பெருமையையும் மீண்டும் பெறுவதற்கு நாம் உழைக்க வேண்டும்.


latest tamil news



நாட்டின் பிற பகுதிகளுக்கு தமிழ்மொழி பரவுவதை ஊக்கப்படுத்த வேண்டும். தமிழ்மொழியின் வளமையின் முழு பயனையும் நாம் பெற வேண்டும். பிற மாநில பள்ளி மாணவர்களை போல், நம் பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளையும் கற்க வேண்டும். பிற இந்திய மொழியின் அறிவை நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது சரியல்ல. ஆன்மிக ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் கோயில்களை பேணி காக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ரவி தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
26-ஜன-202208:08:08 IST Report Abuse
Tamilan ........
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-ஜன-202204:15:19 IST Report Abuse
J.V. Iyer நீட் தேர்வு ரத்தால் பயன்அடைவது ஒரு சில அரசியல்வாதிக்கு நடத்தும் மருத்துவ கல்லூரிகளே. இது உள்ளங்கை நெல்லிக்கனி அல்லவா. ஆனால் நீட் தேர்வால் பயன் அடைவது ஏழைகளும், எல்லா சாதியினரும், நன்றாகப்படிக்கும் மாணவ, மாணவியரும்.
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
26-ஜன-202204:00:25 IST Report Abuse
S. Bharani நீட் வைத்து அரசியல் செய்யும் விடியல் கும்பலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் புரிந்து கொள்ள வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X