மயிலாடுதுறை: சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் முற்றுகையிட்டு அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவாயிலில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் அஞ்சம்மாள் தாமரைச்செல்வி விஜயன் சரவணன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சிமன்ற நிர்வாகத்தில் தலையிடும் ஒன்றிய அதிகாரிகளை கண்டித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் திமுக நிர்வாகிகள் பணித்தள பொறுப்பாளராக நியமனம் செய்வதை கண்டித்தும், 15வது மாநில நிதிக்குழு வளர்ச்சிப் பணிகளுக்கு கூடுதலாக கமிஷன் தொகை கேட்கும் அதிகாரிகளை கண்டித்தும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கக்கூடாது, ஏற்கனவே பணி செய்து வரும் பணி தர பொறுப்பாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நுழைவாயிலை முற்றுகையிட்டு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE