வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரபல ஆன்லைன் ஒடிடி தளங்களான அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் 400 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட ஒப்பந்தம் இட்டுள்ளன.
அமேசான், நெட்ப்ளிக்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் ஜாம்பவான்கள் தற்போது இந்திய தயாரிப்பு நிறுவனமான கிளீன் சிலேட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மெகா ஒப்பந்தம் ஒன்றை இட்டுள்ளது. கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அடுத்த 18 மாதங்களில் இந்திய திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இவை அமேசான், நெட்பிளிக்ஸ் தளங்களில் திரையிடப்படும். இதற்காக இந்த தயாரிப்பு நிறுவனத்தின் துணை நிறுவனர் கரண் ஷர்மா உடன் தற்போது நெட்பிளிக்ஸ் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பிரபல தொழிலதிபரான இவர், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தயாரிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு தனது சகோதரி நடிப்பில் வெளியான 'என் ஹெச் 15' என்கிற ஆணவப்படுகொலையை மையமாகக் கொண்டு வெளியான திரைப்படம் மெகாஹிட் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் படங்கள் அமேசான், நெட்பிக்ஸ் தளங்களில் வெளியானால் இந்தியாவில் இவற்றின் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர் என நம்பப்படுகிறது. மேலும் அமெரிக்க பங்குச் சந்தையில் இந்த இரு நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயரும் என்பதில் சந்தேகமில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE