பா.ஜ.,வுக்கு தாவிய உ.பி., காங்கிரஸ் எம்.பி.,: கோழை என விமர்சித்த காங்.,

Updated : ஜன 25, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (21)
Advertisement
லக்னோ: உத்தர பிரதேச காங்கிரஸ் எம்.பி.,யும், பிற்படுத்தப்பட்ட சமூக தலைவர்களில் முக்கிய நபராக அறியப்படுபருமான ஆர்.பி.என்.சிங்., பா.ஜ.,வில் இணைந்ததற்கு, 'கோழைகளால் எதிர்த்து போராட முடியாது' என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.ஆர்.பி.என்.சிங்., மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் உள்துறை இணை அமைச்சர் பதவி வகித்தவர். இவர் உத்தர பிரதேசத்தின் பத்ராவுனா தொகுதி எம்.பி.,யாக
Senior Congress Exit, RPN Singh, Joins, BJP, UP Election, Congress, Criticize,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: உத்தர பிரதேச காங்கிரஸ் எம்.பி.,யும், பிற்படுத்தப்பட்ட சமூக தலைவர்களில் முக்கிய நபராக அறியப்படுபருமான ஆர்.பி.என்.சிங்., பா.ஜ.,வில் இணைந்ததற்கு, 'கோழைகளால் எதிர்த்து போராட முடியாது' என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

ஆர்.பி.என்.சிங்., மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் உள்துறை இணை அமைச்சர் பதவி வகித்தவர். இவர் உத்தர பிரதேசத்தின் பத்ராவுனா தொகுதி எம்.பி.,யாக இருக்கிறார். உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் இன்று காங்கிரசிலிருந்து விலகினார். அடுத்த அதிர்ச்சியாக அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஜோதிராதித்ய சிந்தியா முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்துவிட்டார்.


latest tamil news


பின்னர் ஆர்.பி.என்.சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 32 வருடங்களாக ஒரு கட்சியில் இருந்தேன். அக்கட்சி முன்பு போல் இல்லை என்றே சொல்ல வேண்டும். இன்று மக்கள் நலனுக்காக பாடுபடும் கட்சி என்றாலும், தேசத்தைக் கட்டியெழுப்பும் கட்சி என்றாலும் அது பா.ஜ., தான் என அனைவருக்கும் தெரியும், என்றார்.


latest tamil news


இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டத்தை தைரியத்தால் மட்டுமே எதிர்கொள்ள முடியும். அதற்கு வலிமை தேவை. கோழைகளால் எதிர்த்துப் போராட முடியாது என்று பிரியங்கா கூறியுள்ளதாக தெரிவித்தார்.

பிரியங்கா 2019ல் உ.பி., காங்கிரஸ் பொறுப்பாளர் ஆனதிலிருந்து தற்போதுடன் 2 தலைவர்கள் வெளியேறியுள்ளனர். கடந்தாண்டு பிராமண சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருந்த ஜிதின் பிரசாதா விலகி பா.ஜ.,வில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - stockholm,சுவீடன்
25-ஜன-202223:44:34 IST Report Abuse
srinivasan There is no congress in UP. Rakulghee holds the key for bjp success in UP. Hardworking for bjp.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
25-ஜன-202223:14:49 IST Report Abuse
s t rajan காங்கிரஸ் காரர்கள் பாராட்ட வேண்டியது அந்த ஒரு குடும்பத்திடம் இருந்து காங்கிரஸை காப்பாற்ற.
Rate this:
பேசும் தமிழன்உண்மை தான் கான் கிராஸ் காரர்கள்... கோமா நிலையில் இருக்கும் கட்சியை காபாற்ற..... விடாப்பிடியாக பதவியில் தொங்கி கொண்டு இருக்கும்... அந்த இத்தாலி குடும்பத்துக்கு எதிராக தான் போராட்டம் நடத்த வேண்டும்...
Rate this:
Cancel
25-ஜன-202221:50:45 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K பாஜகவிலிருந்து சமாஜ்வாதிக்கு தாவும் போது இனித்த காங்கிரஸுக்கு இப்போது காங்கிரசிலிருந்து பாஜகவுக்கு தாவும் போது கசப்பது ஏன் ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X