வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: பிரிட்டன் , பிரதமர் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியது குறித்து போலீஸ் விசாரணை துவக்கியுள்ளதால், பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் 2020ல் கொரோனா முதல் அலையின் போது கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 2020 மே மாதம், லண்டனின் 10, டவுனிங் தெருவில் உள்ள பிரதமரின் அலுவலக இல்லத்தில் போரிஸ் ஜான்சன் நடத்திய மது விருந்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கு கண்டனம் எழுந்ததால், தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார்.
![]()
|
இந்நிலையில் பிரிட்டன் ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் கடந்த ஆண்டு ஏப்ரலில் காலமானார். அவரது இறுதி சடங்கு நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக, போரிஸ் ஜான்சன் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியது பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இதனால் மீண்டும் பிரதமர் போரிஸ் ஜான்சன் சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தியது குறித்து லண்டன் மெட்ரோபொலிட்டன் காவல் ஆணையாளர் உத்தரவின்படி போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். இதையடுத்து . பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக சொந்த கட்சியினரே பதவி விலகும்படி வலியுறுத்தி வருவதால் பிரதமர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement