வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றிய, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பழம் பெரும் நடிகை சவுக்கர் ஜானகிக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசு இன்று (ஜன. 25) அறிவித்தது.

இதன்படி இந்தாண்டு 128 பேருக்கு பத்ம விருதுக்கு தேர்வு பெற்றுள்ளவர்கள் விவரம்:
பத்ம விபூஷண்: 4
1) உ.பி..,முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்
2) மறைந்த முப்படை தலைமை தளபதி விபின் ராவத்
3) பிரபா அட்ரே (மஹாராஷ்டிரா) கலை.
4) ஸ்ரீ ராதேஷ்யாம் கெம்கா (இலக்கியம் கல்வி)
பத்ம பூஷண்: 17
1) சுந்தர் பிச்சை (கூகுள் நிறுவனம்)
2) சத்ய நாதெல்லா
3) காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்
உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்மஸ்ரீ: 107 பேருக்கு
நீரஜ் சோப்ரா
சோனு நிஹாம்
சமூக சேவகர் தாமேதரன்
செளகார் ஜானகி (கலை)
முத்து கண்ணம்மாள் (கலை)
வீரசாமி (மருத்துவம்)
ஏ.கே.சி. நடராஜன் (கலை)
உள்ளிட்ட 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன











தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE