இது தான் தி.மு.க.,வின் கொள்கையா?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இது தான் தி.மு.க.,வின் கொள்கையா?

Added : ஜன 25, 2022 | கருத்துகள் (2) | |
இது தான் தி.மு.க.,வின் கொள்கையா?வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - -மெயில்' கடிதம்: தமிழகத்தில், ஹிந்துக்களை கட்டாய மத மாற்றம் செய்து வருவது அதிகரித்து வருகிறது.அப்பாவி ஏழை ஹிந்துக்களுக்கு பணத்தாசை காட்டியும், பள்ளி மாணவ - மாணவியரை மிரட்டியும் மதமாற்றம் செய்கின்றனர்.பல ஆண்டுகளாகவே இது நடைபெற்று வந்தாலும், தி.மு.க.,


இது தான் தி.மு.க.,வின் கொள்கையா?வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - -மெயில்' கடிதம்: தமிழகத்தில், ஹிந்துக்களை கட்டாய மத மாற்றம் செய்து வருவது அதிகரித்து வருகிறது.அப்பாவி ஏழை ஹிந்துக்களுக்கு பணத்தாசை காட்டியும், பள்ளி மாணவ - மாணவியரை மிரட்டியும் மதமாற்றம் செய்கின்றனர்.பல ஆண்டுகளாகவே இது நடைபெற்று வந்தாலும், தி.மு.க., ஆட்சிக்கு வரும்போது எல்லாம், இச்சம்பவம் உச்சம் அடைகிறது.அரியலுார், வடுகர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது மாணவி, தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு
பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால், அந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார் என புகார் கிளம்பியுள்ளது.இந்த கொடுமையை, எந்த செய்தி ஊடகமும் கண்டுகொள்ளவில்லை; தி.மு.க.,வும், அதன் கூட்டணிக் கட்சிகளும், இச்சம்பவத்தைப் பற்றி வாயே திறக்கவில்லை. ஏன், முதல்வர் ஸ்டாலின் கூட இச்சம்பவம் பற்றி எதுவும் கூறாமல் இருக்கிறார்.
இதே சம்பவம், ஹிந்து பள்ளியில் நடந்திருந்தால் இந்நேரம் தி.மு.க. தலைவர்கள், திருமாவளவன், வைகோ, அழகிரி போன்றோர் பொங்கி எழுந்திருப்பர். முதல்வர் ஸ்டாலினும், பள்ளி நிர்வாகம் மீது உடனே நடவடிக்கை எடுத்திருப்பார். மாணவியின் பெற்றோருக்கு இழப்பீட்டு தொகையும் உடனடியாக கிடைத்திருக்கும்.ஆனால் சம்பவம் நடைபெற்றது, கிறிஸ்துவ பள்ளியில் என்பதால் எந்த சத்தமும் வரவில்லை. இதிலிருந்தே, இக்கட்சித் தலைவர்களின் மதச்சார்பற்ற கொள்கை என்ன என்பது, தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
'மத மாற்றம் செய்வது எங்களுடைய வேலை. பிடிக்கவில்லை என்றால் வேறு பள்ளியில் போய் படிக்க வேண்டியது தானே' என்று, பேராயர் எஸ்றா சற்குணம் வெளிப்படையாகவே கூறுகிறார்.'இது எல்லாருக்குமான ஆட்சி' என்று, முதல்வர் ஸ்டாலின் கூறுவது உண்மையானால், பாரபட்சம் இல்லாமல் அந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்திலும் கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் செய்வாரா?


ஒமைக்ரான் யுத்தத்தில் ஜெயிப்போம்!வழக்கறிஞர், அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 2019 டிசம்பரில் சீனாவில் பிரசவித்த கொரோனா, நம் நாட்டில், 2020 ஜனவரியில் தடம் பதித்தது.அதன் பாதிப்பு அதிகரிக்கவும் மத்திய அரசு, மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அறிவித்தது. இது சிறந்த நடவடிக்கை என, ஐ.நா., சுகாதார அமைப்பு பாராட்டியது.உலகளவில் மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள நம் நாடு, மிகப்பெரிய உயிர் இழப்பை சந்திக்கும் என, எல்லாராலும் சொல்லப்பட்டது.
ஆனால் பிரதமர் மோடி, நம் நாட்டு மக்களை மட்டும் அல்ல; உலக நாடுகள் அனைத்துக்கும் வழிகாட்டியாக இருந்து, கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.ஏழை, எளிய நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி, பல நாட்டு மக்களையும் காப்பாற்றி, இந்தியாவின் பெருமையை பறைசாற்றினார்.இங்குள்ள எதிர்க்கட்சிகள், தடுப்பூசிக்கு எதிராக விஷம பிரசாரத்தில் இறங்கினர். இதனால், மத்திய அரசு இலவசமாக
தடுப்பூசி வழங்கியும், அதை போட்டுக் கொள்ள பலரும் தயக்கம் காட்டினர்.தேர்தல் பிரசாரத்தின் போது கூடிய கூட்டமே, கொரோனா இரண்டாம் அலை வீச காரணமாக அமைந்தது. இது, மிகப்பெரிய உயிர் இழப்பை ஏற்படுத்தியது. ஆனால், தடுப்பூசி போட்டுக் கொண்டோரில், 99 சதவீதத்தினர் இரண்டாம் அலையில் உயிர்
தப்பினர்.மத்திய அரசின் தீவிர முயற்சியால், நாட்டில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.தற்போது சில மாதங்களாகத் தான், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்; சரிந்து கிடந்த பொருளாதாரம், மீண்டும் புத்துயிர் பெற்றது.
இந்நிலையில், 'ஒமைக்ரான்' பரவல் அதிகமாகி, மீண்டும் ஊரடங்கு மெல்ல தலைதுாக்கியுள்ளது, கவலை அளிக்கிறது.இது, மக்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். பலர், வறுமைக்கோட்டிற்கு கீழே செல்வர்.நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும்; முக கவசம் அணியாமல், யாரும் வீட்டில் இருந்து வெளியேறக் கூடாது. இந்த இரண்டையும் செய்து விட்டால், எந்த ஒரு வைரசையும், நாம், 90 சதவீதம் வென்றிடலாம்.
நாம் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுத்து, ஒமைக்ரான் யுத்தத்தை வெற்றிகரமாக முறியடிப்போம்!


அவர்களுக்கு என்ன தண்டனை?ஆனந்த் வெங்கட், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொங்கல் பரிசு பொருட்கள் தொகுப்பில் குளறுபடி உள்ளது என, எதிர்க்கட்சிகளும், மக்களும் புகார் தெரிவித்துள்ளனர்.முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த தி.மு.க., அரசு, இப்போது ஆய்வு கூட்டம் நடத்தி, 'உரிய தரத்துடன் பொருட்களை வழங்கத் தவறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என, அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பில் தரமில்லாத பொருட்கள் இருந்தன என்பதை, ஒப்புக் கொண்டதற்காக, தமிழக அரசை வரவேற்கலாம். ஆனால், இந்த உண்மையை முதலிலேயே வெளிப்படையாக சொன்ன, திருத்தணி நந்தனை சிறையில் அடைத்ததற்கு யார் பொறுப்பு?
அவர் மீது, ஜாமீனில் விடுவிக்க முடியாத வழக்கில் பதிவு செய்ததற்கு யார் பொறுப்பு?அவர் மகன் பாபு மனமொடிந்து, தற்கொலை செய்து கொண்டதற்கு யார் பொறுப்பு?தமிழக அரசே ஒப்புக்கொண்ட ஒரு விஷயத்தை சொன்னதற்காக, ஒருவரை சிறையில் அடைத்தும், அவரின் மகன் பலியானதற்கும் காரணமான நபர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?
சட்டத்தை வளைத்து, பொய் வழக்கு போட்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்தோருக்கு என்ன தண்டனை?கலப்பட பொருள் விற்பனைக்கு துணை நின்று, அரசு பணத்தை அதற்காக அள்ளி தந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளை என்ன செய்வதாய் உத்தேசம்?
ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி பொங்கலை கொண்டாடும் யாரும், வசதி படைத்தோர் அல்ல. அங்கு வினியோகம் செய்யப்படும் உணவு பொருட்கள் தரமில்லை என்றால், புகார் சொல்லத் தான் செய்வர்.'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்' என, திருவள்ளுவர் கூறியுள்ளார். அதன் அர்த்தம் புரிந்து நடந்து கொள்ளுங்கள், ஆட்சியாளர்களே!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X