சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜன 25, 2022
Advertisement
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அறிக்கை: குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் ராணுவ வீரர்களின் பேண்ட் வாத்திய குழுவினர், பிரபலமான கிறிஸ்தவ பாடல் ஒன்றை பல காலமாக இசைப்பது வழக்கம். இந்த ஆண்டு, அந்த பாடல் தடை செய்யப்பட்டுள்ளது. அது, நாட்டு மக்களுக்கு அது வேதனையை அளித்துள்ளது.அதை விட அருமையான பல பாடல்களை, நம் ராணுவ பேண்ட் வாத்திய குழுவினர் தேர்வு

பேச்சு, பேட்டி, அறிக்கை

காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அறிக்கை: குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் ராணுவ வீரர்களின் பேண்ட் வாத்திய குழுவினர், பிரபலமான கிறிஸ்தவ பாடல் ஒன்றை பல காலமாக இசைப்பது வழக்கம். இந்த ஆண்டு, அந்த பாடல் தடை செய்யப்பட்டுள்ளது. அது, நாட்டு மக்களுக்கு அது வேதனையை அளித்துள்ளது.அதை விட அருமையான பல பாடல்களை, நம் ராணுவ பேண்ட் வாத்திய குழுவினர் தேர்வு செய்துள்ளதாக கேள்வி... வேதனைப்படாதீர்கள்!


அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
ஒரு பக்கம் இலங்கை கடற்படையினர் தாக்குதல்; மறுபக்கம் இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல் என, தமிழக மீனவர்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், நம் மீனவர்களின் படகுகளை ஏலம் விட இலங்கை அரசும் துடிக்கிறது. இனியும், மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக இருப்பது சரியில்லை. இந்த விவகாரத்தை தமிழக அரசியல்வாதிகள் கைவிட்டு, தேசிய அரசியல் தலைவர்கள் எப்போது கையில் எடுக்கின்றனரோ, அப்போது தான் இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்!


தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை
: தமிழக மக்களின் குடிநீர் தேவைக்காக உருவாக்கப்படும், ஒகேனக்கல் 2வது கூட்டு குடிநீர் திட்டத்தை, கர்நாடக பா.ஜ., அரசு எதிர்ப்பது முற்றிலும் நியாயமற்றது.இரண்டு மாநில அரசுகளும், இந்த விவகாரத்தை பேசி தீர்த்து விட முடியும். எனினும், இதை வைத்து அரசியல் செய்ய விரும்பும் கட்சிகள், இரு மாநிலங்களிலும் இருப்பதால் அதற்கு வாய்ப்பில்லையோ?


தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி:
மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், இந்திய கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் உச்ச கட்டமாகத் தான், இந்திய ஆட்சிப் பணி சட்டத்தை திருத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.கூட்டாட்சி தத்துவத்திற்கு, உங்கள் கூட்டணி கட்சியினரால் பல முறை வேட்டு வைக்கப்படும் போது, சும்மா இருந்து விட்டு, இப்போது வீணாக கதறுவது ஏனோ?


அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 'மாஜி' அமைச்சர் தங்கமணி பேட்டி:
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 'டாஸ்மாக்'கின் 500 கடைகளை மூடினார். அதேபோல், பழனிசாமியும் முதல்வராக பதவியேற்ற போது, 500 கடைகளை குறைத்தார். தி.மு.க., வினர் படிப்படியாக மதுக் கடைகளை குறைப்போம் என்று கூறினர். இப்போது, படிப்படியாக டாஸ்மாக் கடைகளை, பார்களை அதிகப்படுத்தி இருக்கின்றனர்.இப்படியே மாற்றி மாற்றி பொய் சொல்லி, இரண்டு கட்சியினரும் மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்கிறீர்கள். 'டாஸ்மாக்'கை மூடி, அரசின் வருமானத்திற்கு மாற்று வழி கண்டுபிடிக்க ஒருத்தருக்குக் கூடவா தெரியவில்லை? அப்படியெனில், மாநிலத்தை ஆளும் திறன் ஒருவருக்கும் இல்லைஎன்பதை ஒப்புக் கொள்வீர்களா!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X