சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

வயிறு மந்தமானாலும் சளி பிடிக்கும்!

Added : ஜன 25, 2022
Advertisement
அரசு சித்த மருத்துவர்வரலட்சுமி: முதியவர்களுக்கான சளி பிரச்னையை, மூன்று விதங்களில் அணுகலாம். சிலருக்கு சாதாரண சளி, இருமல் இருக்கும்; நெஞ்சில் சளி கட்டியிருக்கும். அந்த சளி வெளியேறினால், நிம்மதியாக உணர்வர். மிளகு, சீரகம், ஓமம் மூன்றையும் தலா ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, சுத்தமான துணியில் முடித்து, தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.அதை வடிகட்டி, அந்த நீரை நாள்
சொல்கிறார்கள்

அரசு சித்த மருத்துவர்வரலட்சுமி: முதியவர்களுக்கான சளி பிரச்னையை, மூன்று விதங்களில் அணுகலாம். சிலருக்கு சாதாரண சளி, இருமல் இருக்கும்; நெஞ்சில் சளி கட்டியிருக்கும். அந்த சளி வெளியேறினால், நிம்மதியாக உணர்வர். மிளகு, சீரகம், ஓமம் மூன்றையும் தலா ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, சுத்தமான துணியில் முடித்து, தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.அதை வடிகட்டி, அந்த நீரை நாள் முழுதும் குடிநீராக பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் சிறிது துளசியையும் சேர்த்துக் கொள்ளலாம்.ஆடாதோடா இலைகள், துளசி இலைகள், துாதுவளை இலைகள், சிறிது திப்பிலி சேர்த்து கொதிக்க வைத்த நீரை, கஷாயமாக வாரம் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருவேளை குடிக்கலாம். திப்பிலியை வெறும் கடாயில் லேசாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அதை சிறிதளவு தேனில் குழைத்து தினம் சிறிது சாப்பிடலாம். 'வீசிங் இல்லை; நெஞ்சில் உள்ள சளி வெளியேறினால் போதும்' என்பவர்கள் இதைச் செய்யலாம்.இன்னும் சிலருக்கு, காய்ச்சல் இருக்காது. ஆனால் கடுமையான மூக்கடைப்பு, சளி இருக்கும். அவர்கள் ஆடாதோடா சூரணம், முசுமுசுக்கை, திப்பிலி போன்றவற்றை கஷாயமாக செய்து குடித்தால், நெஞ்சை அடைத்திருக்கும் சளி வெளியேறிவிடும். சிலருக்கு சளி இருக்காது; ஆனால், அடிவயிற்றிலிருந்து இருமல் மட்டும் தொந்தரவு செய்யும். அவர்கள் அதிமதுரம், சித்தரத்தை சேர்த்த கஷாயம் குடிக்கலாம்.சளித் தொந்தரவுஉள்ளவர்களுக்கான பொதுவான ஆலோசனைகள்...குளிர்ச்சியான, மந்தத்தை ஏற்படுத்தும் எந்த உணவையும் சாப்பிடக் கூடாது. சளி என்பது, நெஞ்சுடன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; வயிற்றில் மந்தம் ஆனாலும் உண்டாகும். மந்தத்தால் பாதிக்கப்படுவோருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் வருவதையும், ஒன்றிரண்டு நாட்களில் காய்ச்சல் போனாலும், சளி மட்டும் நீடிப்பதையும் பார்க்கலாம். அதனால் தான், வயிற்றை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.இரவு துாங்கும் போது, 'திக்'கான பால் குடிப்பது, இரவில் தாமதமாக சாப்பிடுவது போன்றவை கூடாது. சளி அதிகமாக இருக்கும் போது செரிமானம் சரியாக இருக்காது. இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்து அரைத்த துவையல் சாப்பிடலாம். ஓமத்தை வறுத்து பொடித்து, சிறிய துணியில் வைத்துக் கட்டி, அவ்வப்போது மூக்கின் அருகில் வைத்து இழுக்கலாம். இது மூக்கடைப்பை சரி செய்து, சுவாசத்தை சீராக்கும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X