சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை: முதல்வர் ஒத்துழைப்பு கிடைக்குமா?| Dinamalar

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை: முதல்வர் ஒத்துழைப்பு கிடைக்குமா?

Added : ஜன 25, 2022 | |
சென்னை - சேலம் இடையே, 276 கி.மீ.,க்கு எட்டு வழிச்சாலை அமைக்கப்படும் என, மத்திய அரசு, 2018ம் ஆண்டு அறிவித்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள்வழியாக, இச்சாலை அமைய உள்ளது.இதற்காக, 6,978 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, 2019ல் பணிகள் துவக்கப்பட்டன. இதற்கு விவசாயிகள், சில கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இது தொடர்பான வழக்கில்,

சென்னை - சேலம் இடையே, 276 கி.மீ.,க்கு எட்டு வழிச்சாலை அமைக்கப்படும் என, மத்திய அரசு, 2018ம் ஆண்டு அறிவித்தது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள்வழியாக, இச்சாலை அமைய உள்ளது.இதற்காக, 6,978 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, 2019ல் பணிகள் துவக்கப்பட்டன. இதற்கு விவசாயிகள், சில கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பான வழக்கில், சாலை பணிகளுக்கு தடை விதித்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.மேல் முறையீட்டு வழக்கில், சாலை பணிகளை தொடர்வதற்கு, 2021ல் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதே நேரம், கையகப்படுத்திய நிலங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன.
சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை, சமூக, பொருளாதார தாக்க அறிக்கை தயாரித்து, அதன்பின், நிலங்களை கையகப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஐ.டி., வல்லுனர் குழு வாயிலாக, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. சமூக, பொருளாதார அறிக்கை தயாரிப்பதற்கு, கேரள மாநிலம், கொச்சியில் உள்ள 'கிட்கோ' என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சமூக, பொருளாதார அறிக்கை தயாரிக்க, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள தாசில்தார்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.இது தொடர்பாக, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக நெடுஞ்சாலைத் துறை செயலர் தீரஜ்குமார் ஆகியோருக்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய, சென்னை மண்டல அதிகாரி வாயிலாக, 2020 அக்டோபர் மாதம் கடிதம் எழுதப்பட்டுள்ளது; இதுவரை பதில் இல்லை.
இதனால், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு, அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தவித்து வருகின்றனர். இதற்கிடையே, 'தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை, தமிழக அரசு வழங்கும்' என, முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். ஆனால், 'சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை பணி தொடர்பாக, மத்திய அரசிடம் இருந்து, எந்த கடிதமும் வரவில்லை.
மத்திய அரசு கடிதம் அனுப்பும் பட்சத்தில், முதல்வர் முடிவு செய்வார்' என, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு உத்தரவாதம் அளித்துள்ளார்.இது தொடர்பாக, தமிழக முதல்வருக்கு, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அல்லது தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயர் அதிகாரிகள் கடிதம் எழுத வேண்டும். சாலை பணிக்கு தேவையான ஒத்துழைப்பை, தமிழக முதல்வரிடம் இருந்து பெற முயற்சிக்க வேண்டும்.
கலெக்டர்களின் அனுமதியை எதிர்பார்த்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காத்திருப்பது, காலம் கடத்தும் நடவடிக்கையாகவே அமையும்.


- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X