வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: தொடர் மோதலில் பாஜ.,-சிவசேனா கட்சி முக்கியஸ்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் பிரபல கேலிச்சித்திர கலைஞர் ஆர்.கே.லட்சுமன் வரைந்திருந்த கேலிச்சித்திரம் ஒன்றை சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
கடந்த 2006ம் ஆண்டு மறைந்த பாஜ., முன்னாள் யூனியன் அமைச்சர் பிரமோத் மகாஜன் நீண்ட காலமாக பால்தாக்கரே உடன் நட்பு பாராட்டி வந்தவர். 25 ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் பாஜ.,வுடன் சிவசேனா கூட்டணியில் இருந்து வந்தது. இந்த காலகட்டத்தில் சிவசேனாவிடம் அதிக நட்பு பாராட்டி வந்த பாஜ., அமைச்சராகத் திகழ்ந்தவர் பிரமோத் மகாஜன்.
கடந்த 2006-ஆம் ஆண்டு சொத்துப் பிரச்னை காரணமாக தனது தம்பியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பால் தாக்கரேவின் அறிவுரைகளை கேட்டதால்தான் பிரமோத் மகாஜன் கொல்லப்பட்டார் என்று கூறும் வகையில் உருவாக்கப்பட்ட கேலிச்சித்திரத்தை சஞ்சய் ராவத் பகிர்ந்திருந்தார்.

இது பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மஹாஜனை அதிருப்திக்கு உள்ளாக்கியது. இதனையடுத்து இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து பதிவிட்ட பூனம், பால் தாக்கரே, பிரமோத் மகாஜன் ஆகிய இருவருமே ஹிந்துத்துவா கொள்கைக்காக பாடுபட்டவர்கள் என்றும் அவர்களைப் பற்றி இழிவாக கேலிச்சித்திரம் பதிவிடக் கூடாது என்றும் சஞ்சய் ராவத்திற்கு பதிலளித்தார்.
இதுபோல சமீபத்தில் சிவசேனா-பாஜ., ஆகிய இரு கட்சிகளின் பல முக்கியஸ்தர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக பாஜ.,வின் மீதான சிவசேனா விமர்சனத்துக்கு மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE