வார்தா:மஹாராஷ்டிராவின் வார்தாவில் பா.ஜ., - எம்.எல்.ஏ., மகன் உட்பட மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் ஏழு பேர் கார் விபத்தில் பலியாகினர்.
மஹாராஷ்டிராவின் வார்தா மாவட்டம் செல்சுரா கிராமம் அருகே நேற்று நள்ளிரவு 1:30 மணிக்கு வேகமாக வந்த 'மஹிந்த்ரா எக்ஸ்.யு.வி - 500' கார் பாலத்தில் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் அந்த கார் அடையாளம் காண முடியாத அளவுக்கு நொறுங்கியது. விபத்தில், காரில் இருந்த ஏழு பேர் பலியாகினர்.
தகவல் அறிந்த போலீசார் உடல்களை மீட்டனர். விபத்து குறித்து போலீசார் கூறியதாவது: விபத்தில் பலியான ஏழு பேரும் வார்தாவில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள். அவர்களில் திரோரா தொகுதியின் பா.ஜ., - எம்.எல்.ஏ., விஜய் ரஹாங்டேலின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேலும் ஒருவர். இவர் முதலாம் ஆண்டு மாணவர்.மற்றவர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள்.
பலியானவர்களில் ஒருவரது பிறந்தநாள் விழாவை யவத்மால் மாவட்டத்தில் கொண்டாடி விட்டு, மருத்துவக் கல்லுாரிக்கு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement