இதற்கு பதிலாக ஜூஹி சாவ்லா சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மக்கள் பாதிப்பு
'ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்' உள்ளிட்ட நிறுவனங்களுக்கு '5ஜி' தொழில்நுட்பத்தை சோதனை முறையில் பரிசோதித்து பார்க்க தகவல் தொடர்புத்துறை அனுமதி அளித்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா, 53, டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'இந்த புதிய தொழில்நுட்பத்தில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சால் புற்றுநோய், இதய கோளாறு உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவர். 'எனவே 5ஜி பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்' என, கூறியிருந்தார். மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ஜூஹி சாவ்லாவுக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இதை எதிர்த்து கூடுதல் அமர்வில் ஜூஹி சாவ்லா மனு தாக்கல் செய்தார்.இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் விபின் சங்கி, ஜஸ்மீத் சிங் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: ஜூஹி சாவ் லாவுக்கு விதிப்பட்ட அபராதத்தை முழுமையாக ரத்து செய்ய முடியாது. ஆனால் அபராத தொகையை 2 லட்சம் ரூபாயாக குறைக்கலாம்.
சமூக சேவை
அதற்கு ஜூஹி சாவ்லா, மக்களிடம் தனக்கு உள்ள பிரபலம், மதிப்பை பயன்படுத்தி சமூக சேவையில் ஈடுபட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினார்.இதற்கு ஜூஹி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சல்மான் குர்ஷீத் சம்மதம் தெரிவித்தார். இதைஅடுத்து விசாரணை 27க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE