வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால் ;''தேசிய கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் 'அமேசான்' இந்தியா நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்படும்,'' என, மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா, ஆன்லைன் வாயிலாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.இந்நிலையில் அமேசான் நிறுவனம் தேசிய மூவர்ண கொடி அச்சிட்ட ஆயத்த ஆடைகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வது குறித்து சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது.
இது குறித்து ம.பி., உள்துறை அமைச்சர்நரோத்தம் மிஸ்ரா கூறியதாவது:தேசியக் கொடிக்கு தனி மரியாதை தர வேண்டும். தேசிய கொடியை பயன்படுத்துவது தொடர்பான விதிமுறைகள் உள்ளன. ஆனால் அமேசான் நிறுவனம் தேசிய கொடி அச்சிடப்பட்ட காலணியை கூட விற்பனை செய்கிறது. எனவே தேசிய கொடியை அவமரியாதை செய்த அமேசான் நிறுவனம் மீது வழக்கு தொடுக்கும்படி டி.ஜி.பி.,க்குஉத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய கொடி அவமதிப்பு விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அமேசானுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
அமேசான் நிறுவனம்
தேசிய கொடியுடன் விற்பனை செய்த 'கீ செயின்', சாக்லெட், கோப்பைகள், ஆடைகள் ஆகியவற்றின் படங்கள் சமூக வலைதளங்களில்வெளியாகியுள்ளன. இதையடுத்து தேசிய கொடியுடன் பொருட்களை விற்பனை செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமேசான் தெரிவித்து உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE